எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஜக எம்.பி.யின் கண்டுபிடிப்பு

புதுடில்லி, ஜூலை 8- இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள் எனவும், அதனால்தான் அவர்கள் விடு தலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் பாஜக எம்பி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள் பிரிட்டிஷ்காரர்களாக இருந்தனர். அதனால்தான் அவர்கள் விடுதலைப்போரில் பங்கேற்காமல் இந்தியாவை ஏமாற்றினார்கள். இந்துக்களோ முஸ்லீம்களோ அவ்வாறு ஏமாற்றவில்லை. இந்திய விடுதலைக்கு ஒன்று பட்டு ஒற்றுமையாக - இந்துஸ்தானிகளாக நாம் போராடி னோம், என மும்பைவடக்கு நாடாளுமன்ற தொகுதியிலி ருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக உறுப்பினர் ஷெட்டி கூறினார். மும்பை ஷியா கபர்ஸ்தான் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழச்சி ஒன்றில், கலந்துகொண்டு இவ்வாறு பேசியதற்கு எதிர்ப்பும் விமர்சனமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி,ஷெட்டிக்கு வரலாறு தெரி யாது எனவும்சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்தும் நோக்கத்து டன் இதை கூறியிருப்பதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்களை அச்சுறுத்தவே துப்பாக்கிச்சூடு:

நடிகர் பிரகாஷ்ராஜ்

தூத்துக்குடி, ஜூலை 8- நாட்டு மக்களை அச்சத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசுகளின் நோக்கம் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் அரசுகளை சாடினார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் கூட்டம் சி.அய்.டி நகரில் உள்ளகவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது: தூத்துக் குடியில் நடந்தவற்றை யும் நடப்பவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாட்டுமக்களை அச்சத்தில் வைத்து இருக்கவேண்டும் என்பதே அரசின் நோக்கம்.அப்படி பயமுறுத்தி ஆள்பவர் களின் முடிவு மோசமானதாக இருக்கும்.நான் அரசியலில் தான் இருக்கிறேன். ஆனால் அரசியல்வாதியாக இல்லை. சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச நினைக் கிறேன். என்னை போன்றோரின் குரல்மக்களுக்கு தேவை. கேள்வி கேட்பதுநமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மோடி கூட்டத்துக்கு ஆள் சேர்க்க ரூ.7 கோடி செலவாம்!

ஜெய்ப்பூர், ஜூலை 8- ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்டுவதற்கு, அம்மாநில பாஜக அரசானது, 7 கோடி ரூபாயை வாரி இறைத்து செலவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா தலை மையில் பாஜக ஆட்சிநடந்து வருகிறது. இங்கு விரைவில் தேர்தல் வரவிருப்பதால், சாதனை விளக்கக் கூட்டங்கள் என்றபெயரில் அரசுப் பணத்திலேயே பொதுக்கூட்டங் களை நடத்தி வருகிறது. இதனொரு பகுதியாக, ராஜஸ்தான் பாஜக அரசின் சாதனையை விளக்குவதற்காக ஜெய்ப்பூரில் சனிக்கிழமையன்று, பிரதமர் மோடியையே அழைத்து வந்து வசுந்தரா ராஜே கூட்டம் நடத்தினார்.

இந்நிலையில், மோடியின் இந்த கூட்டத்திற்கு ஆள் சேர்க்க ரூ. 7 கோடியை வசுந்தரா ராஜே அரசு வாரி இறைத்தி ருப்பது தெரியவந்துள் ளது. மோடியின் பொதுக்கூட்டத் துக்காக ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில் இருந்தும் ஆள் திரட்டப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்து 600 பேருந் துகள் மூலம்அவர்கள் ஜெய்ப்பூருக்கு அழைத்து வரப் பட்டுள்ளனர். இதற்கான பணி கடந்த 2 நாட்களாக நடந்துள்ளது. இதற் காக ராஜஸ்தான் மாநில அரசு7 கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு கிலோ மீட்டர் தூர பயணத் திற்கு தலா ரூ. 20 விகிதம் பணம் வழங்கப்படும் என்ற அடிப் படையில் இந்த செலவு செய்யப்பட்டுள்ளது.பாஜக அரசின் இந்த செயலுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ரூ. 2, 654 கோடியை சுருட்டிய குஜராத் தனியார் நிறுவனம்!

அகமதாபாத், ஜூலை 8- குஜராத்தைச் சேர்ந்த கேபிள் ஒயர்தயாரிப்பு நிறுவனம், 11 வங்கிகளில்மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 654 கோடியை மோசடி செய்துள்ளநிலையில், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரிகள்2 பேரை சிபிஅய் கைது செய்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாக கொண்டு டைமண்ட்பவர் இன்ஃப்ராஸ்டரக்சர் என்ற பெயரில் கேபிள் ஒயர் தயாரிக்கும்நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனம், விரிவாக்கம் என்ற பெயரில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 11 அரசு மற்றும் தனியார் வங்கிகளிடம் கடன் பெற்றுள்ளது. இந்த கடன்தொகை, 2016-ஆம் ஆண்டு ஜூன் 29 தேதி வரை, மொத்தம் 2 ஆயிரத்து 654கோடியே 40 லட்சம் ரூபாய் ஆகும்.ஆனால், இதனை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக, டிபிஅய்எல் நிறுவனம் மீது சிபிஅய் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் டைமண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுரேஷ் நரையன் பாத்நகர் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். மேலும், மோசடி வழக்கில் சுரேஷின் மகன்கள் அமித், சமித் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டனர்.தற்போது, டைமண்ட் கம்பெனியின் கடன் மோசடிக்கு உடந் தையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பாங்க் ஆப் இந்தியாவின் ஓய்வுபெற்ற பொது மேலாளர் அக்னி கோத்ரி, துணைப் பொதுமேலாளராக இருந்த பி.கே. சிறீவஸ்தவா ஆகியோரையும் சிபிஅய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner