எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப்.15 குழந்தைகள் திரும ணத்தை தடுக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய் யும்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களை திருமணம் செய் வதை தடுப்பதற்காக குழந்தை திருமண தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது. இந்த வயதுக்கு உட்பட பெண்களுடன் பாலியல் உறவு கொள்வது வன்கொடுமைக்கு நிக ரானதாக கருதப்பட்டு  தண்டனை அளிக் கப்படுகிறது. இருப்பினும், நாட்டில் குழந்தை திருமணம் நடப்பது தொடர் கிறது. இவற்றை தடுப்பதற்காக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப் பட்டது. அதில், நாடு முழுவதும் 2.30 கோடி குழந்தைத் திரும ணங்கள் நடந்துள்ளது. இவற்றை தடுக்க துரித நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது. இதை  கடந்த அக்டோபரில் விசாரித்த உச்ச நீதிமன்றம், 15 வயது முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களை திரு மணம் செய்வது சட்டப்பட்டப்படி குற் றம். அவ்வாறு திருமணம் செய்யப்படும் மனைவியிடம் கணவர் உடலுறவு வைத் துக்கொண்டால் அது பாலியல் வன்கொடு மையாக கருதப்படும். அப்படிப்பட்ட கணவர் மீது வன்கொடுமை தடுப்பு சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நட வடிக்கை எடுக்கலாம். குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை மாநில அரசு களும் முறையாக செயல் படுத்த வேண்டும் என உத்தர விட்டது. ஆனால், இந்த உத்தரவை எந்த ஒரு மாநில அரசும் செயல்படுத்த வில்லை என உச்ச நீதி மன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்ய்ப்பட்டுள்ளது. இது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் பிறப்பித்த உத்தரவில், குழந்தை திருமணத்தை தடுக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிர தேச அரசுகளும் விரைவில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner