பெங்களூரு, ஏப்.14- கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு எதிராக, தீவிரபிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், நாட்டில் மத வாதத்தை விதைக்கும் புற்றுநோ யாக பாஜக கட்சி இருப்பதாக சாடியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 12-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனொரு பகுதி யாக, நடிகர் பிரகாஷ்ராஜ் பாஜக-வுக்கு எதிராக தீவிரப் பிரச் சாரம் மேற் கொண்டு வருகிறார்.இந்நிலையில், கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியிருப்பதாவது: இந்தியாவில் பல வகை மொழி, ஜாதி, மதம், இன மக்கள் வாழும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக உள்ளது.அனைத்து வகுப் பினரும் சுதந்திரமாக வாழும் உரிமை நமது அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமையை பறிக் கும் வகையில் மத்தியில் ஆளும் மதவாத பா.ஜ.க. அரசு முயற்சி மேற் கொண்டு வருகிறது. பாஜக இந்த நாட்டை ஆளக்கூடாது. எல்லோர் மத்தியிலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கட்சியாக பாஜக மாறிவிட்டது. சிந்தனையாளர்கள் கவுரிலங்கேஷ், கல்புர்கி ஆகியோரின் படுகொலைக்கும் அந்த வெறுப்புணர்வே காரணம். எந்த ஒரு பிரச்சினைக்கும் அவர்களிடம் தீர்வு என்பதே கிடையாது. ஏதாவது ஒரு மோதலை உருவாக்கி மக்களை பிரித்தாளும் வேலையைத் தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். மோடி அரசு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைக்கூலியாக இருக்கிறது. தென்மாநில மக்கள் மத்தியில் மதவாத விதையை விதைத்து வரும் புற்றுநோய் கட்சியான பா.ஜ.க.வை யாரும் ஆதரிக்க மாட்டார்கள். மோடி மீண்டும் பிரதமர் ஆகக்கூடாது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது.இவ்வாறு பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்.இதனிடையே பிரகாஷ் ராஜின் பேச்சால், கடும் ஆத்திர மடைந்துள்ள பாஜக-வினர், காலை பெங்களூரு கல்புர்கி நகரில் நடிகர் பிரகாஷ்ராஜ் வந்த காரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்களாம்.