எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

போபால், ஏப். 12- -சாமியார்களுக்கு அமைச்சர் தகுதி வழங்கப்பட் டது தொடர்பாக பதிலளிக்கும் படி மத்தியப் பிரதேச பாஜக அரசுக்கு, அம்மாநில நீதிமன் றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத் தில் உள்ள 5 சாமியார் களுக்கு அமைச்சர் பதவிக்கு உரிய தகுதி அளிப்பதாக பாஜக முதல்வர் சிவராஜ் சிங்சவுகான் அண்மையில் அறிவித்தார். நர்மதா நதி பாதுகாப்பு விஷயத்தில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த 5 சாமியார்களும் உதவி செய்வார் கள்; மரம் நடுதல், தண்ணீர் சிக்கனம், நர்மதை நதியைச் சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றில் உதவுவார்கள் என்ற அடிப்படையில், இந்த தகுதியை அளித்ததாகவும் சவு கான் கூறினார்.

இதன்படி, கம்ப்யூட்டர் பாபா, யோகேந்திர மகந்த், நர்மதானந்தா, ஹரிகரானந்தா, பாபாயுமகராஜ் ஆகிய 5 சாமியார்கள் அமைச்சர் தகுதி யில் வலம் வந்தனர்.ஆனால், பாஜகவைச் சேர்ந்தமூத்த தலை வர்களே சிவராஜ்சவுகானின் இந்த நடவடிக்கையை விமர் சித்தனர். சாமியார்களுக்கு அமைச்சர் தகுதியில் வழங்கப் பட்டுள்ளது எட்டாவது அதி சயம் என்று அக்கட்சியைச் சேர்ந்த பாபுலால் கவுர் விமர்சித்தார். இந்நிலையில், மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிராக மத் தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்யப் பட்டது. இந்த மனுவை விசா ரித்த நீதிமன்றம், சவுகான் அர சுக்கு அறிவிக்கை அனுப்பி உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner