எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜம்மு, ஜன. 27  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அழகு மிகுந்த டால் ஏரியை 5 வயது சிறுமி ஜன்னத் என்பவர் தூய் மைப்படுத்தி அதன் மூலம் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறார்.

ஜம்மு-காஷ்மீரின் புகழ் பெற்ற ஏரியாக இருப்பது டால் ஏரி. இந்த ஏரியில் உள்ள படகு வீடுகளில் படகுசவாரி செய்வது சுற்றுலாப் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இந்த ஏரியில் தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஹாலிவுட் படமான ஆக்டோபஸி என்ற திரைப்படத்தின் சில காட்சிகளை இந்த ஏரியில் படம் பிடித்துள்ளனர். மேலும் பல மலையேற்ற வீரர்களின் தங்கு முகாமாகவும் இந்த டால் ஏரி விளங்குகிறது.

செப்டம்பர் மாதத்தில் மிகப்பெரிய விற்பனைக் கண்காட்சி நடக்கும் இடமாக இந்த ஏரியின் கரையோர இடம் விளங்கு கிறது. இந்நிலையில் ஜன்னத் என்ற 5 வயது சிறுமி தமது தந்தையுடன் ஏரியில் மாசு அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளூர் மக்களை மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளையும் வியக்க வைத் துள்ளார். குப்பைகளைக் கண்ட இடங்களில் போடாதீர்கள். சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருங்கள், எங்களோடு நீங்களும் இந்த ஏரியை தூய்மையாக்க உதவுங்கள் என்று அந்தச் சிறுமி எல்லோரிடமும் கைகூப்பிக் கோரிக்கை விடுத்து வருகிறார். இவரது தந்தை ஏரியில் படகுவீடு ஓட்டி அதன் மூலம் வருகின்ற வருவாயில் தான் குடும்பம் நடத்துகின்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner