எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மண்டல் குழுவின் பரிந் துரையை நிறைவேற்றிய பிரதமர்; பாரத ரத்னா அம்பேத்கர், பெரியார் ராமசாமி, ராம் மனோகர் லோகியா ஆகியோ ரது கனவை நனவாக்கிய செயல் இது என நாடாளுமன் றத்தில் (7.8.1990) முழங்கியவர்.

காவிரி நடுவர் மன்றம் அமைத் தவர்; மாநிலங்களிடையேயான குழு அமைத்தவர்; சென்னை விமான நிலையத்திற்கு அண்ணா, காமராசர் பெயரை சூட்டியவர்.

பாபா சாகிப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது  அவரது படம் நாடாளு மன்றத்தில் இடம் பெற செய்தவர்; அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் மே தின விடுமுறை அறிவித்தவர்.

மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற் றியதால் தனது ஆட்சி கவிழும் என்ற நிலை யிலும் உறுதியாய் இருந்தவர்; ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த முறையை எதிர்த்து போராடி வருகிறோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்யும் வேளை யில், நாங்கள் சிக்கலுக்கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை; ஆனால் ஆட்சியில் இருந் தாலும், இல்லையென்றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என மக்கள வையில் (7.11.1990) சங்க நாதம் செய்தவர்.

இந்திய அரசியலை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான களமாக மாற்றியவர்.

அவரது நினைவு நாளில் (27.11.2008), அவரை வணங்குவோம்; அவரது கொள்கை உரத்தை நாமும் கொள்வோம். வி.பி.சிங் வாழ்க.

- குடந்தை கருணா

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner