எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

லக்னோ அக்.8 இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் பசுவை வெட்டிக்கொலை செய்து இசுலாமியர்கள் மீது பழியைப்போட்டு மதக்கல வரத்தை தூண்ட முயன்ற பார்ப்பனர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார், மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தின் தலைநகரில் உள்ள கத்ரா பஜார் பகுதியில் உள்ள வயல்வெளி யில் மொகரம் விழாவிற்கு மறுநாள் பசுமாட்டை இரண்டு பேர் வெட்ட முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதை அப் பகுதியில் காலைக்கடன் கழிக் கச் சென்ற சிறுவன் பார்த்து விட்டு ஊராரிடம் சென்று இச் சம்பவத்தைக் கூறினார்.

உடனே மக்கள் அங்கு சென்று பார்த்த போது  பிரசாத் என்பவரின் காணாமல் போன பசுவை கழுத்தைவெட்டிக் கொல்ல முயன்று கொண்டிருந்த இருவரை பிடித்தனர். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஊரார் இது குறித்து அந்த இருவரிடம் விசாரித்துக் கொண்டு இருக்கும் போது ஒருவர் தப்பி ஓடினார். மற்றொரு வரை ஊரார் கட்டி வைத்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிடிபட்ட ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அப் போது பிடிபட்டவரின் பெயர் ராம்சேவக் என்பதும், தப்பி ஓடியவர் பெயர் மங்கள் என்ப தும் தெரியவந்தது, இச்சம்பவத் தில் ஈடுபட்ட பார்ப்பனர்கள் இருவர் மீதும் 30க்கும் மேற் பட்ட வழக்குகள் உள்ளன.

இவர்கள் மொகரம் விழா அன்று மதக்கலவரத்தைத் தூண்டுவதற்கு திட்டமிட்டு அந்த ஊரில் இருந்த ஒருவரின் பசுமாட்டை  திருடி அதைக் கொன்று அங்குள்ள கோவி லுக்கு முன்பு வீச திட்டமிட்டி ருந்தனர்.

இந்துக்கள் அதிகம் இருக் கும் அப்பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் வன்முறை ஏற்படுவதற்கும், இதன் மூலம் மாநிலத்தில் மதக்கலவரம் ஏற் படவும் அதிக வாய்ப்பிருந்திருக் கிறது.  இச்சம்பவம் குறித்து கோண்டா காவல்துறை உயரதி காரி குமார் சிங் கூறுகையில், இந்து மக்கள் அதிகம் உள்ள அந்த பகுதியில் மொகரம் விழாவை முன்னிட்டு ஜுலூஸ் எனப்படும் ஊர்வலம் நடக்க இருந்தது. அந்த சமயத்தில் மாட்டை வெட்டிப் போட்டால் மதக் கலவரம் ஏற்படும் என்று தெரிந்தே சதிச் செயலில் ஈடு பட்டார்கள்.

இந்நிகழ்வின் பின்புலத்தில் வேறு யாரேனும் உள்ளனரா என்று விசாரித்து வருகிறோம் என்றார்.

2015-ஆம் ஆண்டும் இதே போல் அக்லாக் என்பவரின் வீட்டின் முன்பு பசுமாட்டை வெட்டிப்போட்டு அவரும் அவரது குடும்பத்தாரும் பசுவைக்கொலை செய்தார்கள் என்று கூறி முகமது அக்லாக்கை அடித்துக்கொலை செய்து, அவ ரது மகனை படுகாயமடையச் செய்து திருமண வயதில் இருந்த அவரது மகளை கூட்டாக சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தனர். இந்த வன்நிகழ்வு சங்கீத்சோம் என்ற உ.பி. சட்டமன்ற உறுப்பினர்.மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா போன்றோரின் தூண்டுத லால் நடைபெற்றது என்று விசாரணையில் தெரியவந்தது. சுமார் 2 ஆண்டுகள் கடந்ததும் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய் யப்பட்டு விட்டனர். மேலும் அக்லாக் கொலைவழக்கில் இன்றுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner