எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, செப்.7  மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூருக்கு ஷக்திகுஞ்ச் விரைவு ரயில் நேற்று மதியம் புறப்பட்டது.

அந்த விரைவு ரயில் இன்று காலை உத்திரப்பிரதேசம் மாநிலத்தை அடைந்தது. ஓபுரா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் சோன்பத்ரா பகுதியில் வந்தபோது, அந்த ரயிலின் 7 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சக செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா கூறுகையில்,

ஹவுராவில் இருந்து ஜபல்பூர் செல்லும் விரைவு ரயில் சோன்பத்ரா பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைவரும் நலமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ரயில் விபத்துக்கள் ஏற்பட்டு வருவது பயணிகளி டையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner