எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, செப்.6 மூத்த பத்திரிகையாளரும் இந்துத்துவா எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் பெங்களூருவில் நேற்று (5.9.2017) மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

மூத்த ஊடகவியலாளர் கவுரிலங்கேஷ் 1962-ஆம் ஆண்டு பெங்களூருவில் பிறந்தார். இவரது தந்தை பி.லங்கேஷ் "லங்கேஷ் பத்திரிகா" என்ற முற்போக்குச் சிந்தனையைப் பரப்பும் கன்னட மொழி வார இதழ் ஒன்றை நடத்திவந்தார். இவரது மூத்தமகளான கவுரிலங்கேஷ் தெலுங்கு தொலைக்காட்சியான ஈநாடு என்ற செய்தி தொலைக்காட்சியில் மூத்த செய்தி ஆசிரியராக பணியாற்றினார்.

அப்போது திருப்பதி உள்ளிட்ட பல கோவில் களில் நடக்கும் மோசடிகளை ஒளிபரப்பினார். அதே போல் பிரபலசாமியார் களின் பின்னணி, அவர்களது வங்கிக்கணக்கு, சொத்துக்கள் அவற்றை எப்படி அடைந்தார்கள் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒரு மணிநேர நிகழ்ச்சி யாக நடத்திவந்தார். மாலை நேரம் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதால் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இந்த நிலையில் 2000 ஆம் ஆண்டு இவரது தந்தை மரணத்திற்குப் பிறகு தானே லங்கேஷ் பத்திரிகையின் முழு நேர ஆசிரிய ரானார்.

சுட்டுக்கொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்புக் களம், மூடநம்பிக்கை ஒழிப்பு, முற்போக்குச் சிந்தனை பரப்புதல், போன்ற பல்வேறு களங்களில் பணியாற்றியவந்தார். இளம் வயதிலிருந்தே முற்போக்குச்சிந்தனையுடன் வளர்ந்த கவுரி தன்னுடைய 20 ஆண்டுகால வரலாற்றில் மதவாதிகளின் அச்சுறுத்தல்களை தினசரி எதிர்கொண்டார்.

துணிச்சலுடன் போராடியவரை  நரேந்திர தாபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி வரி சையில், அதே பாணியில் தலையில் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.  மறைந்த கவுரி லங்கே ஷிற்கு கவிதா என்ற மகளும், இந்திரஜித் என்ற மகனும் உள்ளனர். இவரது கணவர் சித்தானந்த ரஜகட்டாவும் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பை வகித்துவருகிறார்.

இச்சம்பவம் குறித்து கொலைசெய்யப்பட்ட கவுரி லங்கேஷின் சகோதரர் கூறும் போது "என்னை என்றாவது ஒரு நாள் மதவாதிகள் கொலைசெய்து விடுவார்கள். அவர்களால் நான் மண்ணில் வீழும் முன்பு ஓராயிரம் கவுரிகளை உருவாக்கிவிடுவேன்" என்று அடிக்கடி கூறுவார் என்று கூறினார்.

 



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner