எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெய்ஜிங், ஆக.9 சீனாவின் ஜினான் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் விஷ்ணு வர்தன் 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தைபேவின் டி சென்-அய் எதிர்கொண்ட விஷ்ணு வர்தன், 7-6(3), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அவர் தனது 2 ஆவது சுற்றில் சீனாவின் வைல்டு கார்டு சுற்று வீரரான ஜிஜென் ஜாங்கை சந்திக்கிறார்.

இதனிடையே, இப்போட்டியில் பங்கேற்ற சாகேத் மைனேனி உள்ளிட்ட இதர இந்திய வீரர்கள் தங்களது முதல் சுற்றிலேயே தோல்வி யைத் தழுவினர். இதில் மைனேனி ரஷ்யாவின் எவ்ஜெனி டான்ஸ்காயிடம் 2-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். சசிகுமார் முகுந்த் 3-6, 2-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அலெக் சாண்டர் குட்ரியாத்செவிடம் தோல்வி கண்டார்.

சிறீராம் பாலாஜி 2-6, 2-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோ சோடாவிடம் வீழ்ந்தார். சித்தார்த் ராவத் 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சூன் வூ குவோனிடம் வீழ்ந்தார்.

இந்நிலையில், ஆடவர் இரட்டையர் பிரி வில் போட்டித் தர வரிசையில் 3 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவின் சிறீராம் பாலாஜி -விஷ்ணு வர்தன் இணை, சாகேத் மைனேனி -பிரசாந்த் இணையை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னே றியது.

இந்தியாவின் சித்தார்த் ராவத்- சசிகுமார் முகுந்த் இணை 1-6, 2-6 என்ற செட் கணக் கில் செர்பியாவின் மியோமிர் கெச் மானோவிச் - ஸ்பெ யினின் மேரியோ மார்டினெஸ் இணையிடம் வீழ்ந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner