எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரோம், ஆக.8  இத்தாலியைச் சேர்ந்த 29 வயதான டென்னிஸ் வீராங்கனை சாரா எராணி மார்பக புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அப்போது லெட்ரோஸோல் என்ற மருந்தை பயன்படுத்தியுள்ளார். இது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங் கனைகள் பயன்படுத்த தடை செய் யப்பட்ட ஊக்கமருந்து பட்டியலில் உள்ளது.

இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட சிறுநீரக பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது. இதனால் உலக டென்னிஸ் பெடரேசன் அவருக்கு இரண்டு மாதம் தடைவிதித்துள்ளது.

சாரா 2012 ஆம் ஆண்டு பிரான்ஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதே ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் காலிறு திக்கும், அமெரிக்க ஓபனில் அரை யிறுதிக்கும் முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner