எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஜூலை 24- தாய்ப்பாலை போல தாய் மொழியும் முக்கி யம் என மும்பையில் நடந்த விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை பேசினார்.

இலெமுரியா அறக்கட் டளை சார்பில் மூத்த எழுத் தாளர் சீர்வரிசை சண்முகராசன் நினைவை போற்றும் விதமாக மாணவர்களுக்கு விருதுகள், நூல்கள் வெளியீடு மற்றும் தமிழர் கலை பண்பாட்டு நிகழ்வுகள் ஆகிய முப்பெரும் விழா நேற்று (23.7.2017) மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் உள்ள சுதந்திர வீர் சாவர்க்கர் அரங்கத் தில் நடந்தது.

இந்த விழாவிற்கு அய்.ஏ. எஸ். அதிகாரி சேது சொக்கலிங் கம் தலைமை தாங்கினார். இலெமுரியா அறக்கட்டளை தலைவர் சு.குமணராசன் வர வேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண் ணாதுரை கலந்து கொண்டார். விழாவில் பல்வேறு பள்ளி மாணவிகளுக்கு அய்யன் திரு வள்ளுவர் மாணவர் விருது, தந்தை பெரியார் மாணவர் விருது, பெருந்தலைவர் காமரா ஜர் மாணவர் விருது, புரட்சி யாளர் அம்பேத்கர் மாணவர் விருது, அறிவியல் மேதை அப் துல்கலாம் மாணவர் விருது, அவ்வையார் விருது ஆகிய விருதுகள், சான்றிதழ்கள் மற் றும் தலா ரூ.5 ஆயிரத்துக்கான பொற்கிழி வழங்கப்பட்டது.

தமிழ் இலெமுரியா அறக் கட்டளை தலைவர் சு.குமண ராசனின் செய்நன் விதைகள், உலகை அறிவோம், அய்ந்தா வது தூண் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை பேசியதாவது:

வேலைக்காக தமிழ்நாட் டைவிட்டு வந்தாலும் தமிழை விட்டு வரவில்லை.

சமீபத்தில் தமிழ்நாடு பாடத் திட்டம் மாற்றம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் உலகின் பல்வேறு பகு திகளை சேர்ந்த கல்வியாளர்கள், வல்லுநர்கள் கலந்துகொண்டு இருந்தனர். அங்கு தமிழ் மொழியில் தரமான கல்வியை கொடுக்க முடியாது போன்ற தவறான கருத்து நிலவி வந்தது. உண்மையில் தமிழ் எனக்கு தடையாக இருந்தது இல்லை, உரமாகவே இருந்தது. பிற மொழியில் படிக்கும் போது மாணவர்களுக்கு மனஇறுக்கம் ஏற்படுகிறது.

எனவே தாய் மொழியில் தான் படிக்க வேண்டும். பிள் ளைகள் தமிழில் படித்தால் பெரிய நிலைக்கு வர முடியாது என்று நினைப்பதை பெற்றோர் கள் நிறுத்திக்கொள்ள வேண் டும்.

எனக்கு கீழ் உள்ளவர்க ளுக்கு தமிழ் தெரியாது. ஆரம்ப காலத்தில் எனக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது. அவர்கள் என்னை புரிந்து கொள்கிறார் கள். மற்றவர்கள் நம்மை புரிந்து கொள்ள முயற்சி செய்யும் அள விற்கு நாம் முன்னேற வேண் டும். அறிவியல் அறிஞர்களில் 85 சதவீதம் பேர் தாய் மொழி யில் கல்வி படித்தவர்கள் தான். தமிழால் நான் தலை நிமிர்ந்து நிற்கிறேன். தமிழ் படித்து வாழ்க் கையில் முன்னேற முடியும்.

இந்தி ஒழிக என முழக்க மிட்டு தமிழை வளர்க்க மறந்து விட்டோமோ என்று தோன்று கிறது. பிற மொழிகளை கற்ப தில் தவறில்லை. அதே நேரத்தில் தமிழ் வழிக்கல்வி படிப்பதால் யாரும் சோடை போவதில்லை. தாய்ப் பாலை போல நமக்கு தாய் மொழியும் முக்கியம்.
இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் நங்கை குமண ராசன் நன்றி கூறினார். முன்ன தாக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் விவசாயிகள் குறித்த நாடகம் பார்வையாளர்களை கண்கலங்க வைத்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner