எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டார்ஜீலிங், ஜூன் 19 தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் நகரில் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், டார்ஜீலிங் நகரில் உள்ள சவுக்பஜாரில் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர். மூவண்ணக் கொடியையும், கருப்புக் கொடியையும் ஏந்தி வந்த அவர்கள், தனி மாநிலம் கோரி கோஷமிட்டனர்.

அப்போது, டார்ஜீலிங் நகரில் இருந்து உடனடியாக காவல்துறையினரை வெளி யேற்றி, பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்றும், ஜனநாயக வழியில் போராட்டம் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத் தின்போது, காவல்துறையினருடனான மோதலில் உயிரிழந்தவரின் உடலுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோர்க்கா அமைப்பு திட்டம்

இதனிடையே, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பின் சமாதானப் படைப் பிரிவான கோர்க்காலாந்து படையை (ஜிஎல்பி) வலுப்படுத்துவதற்கு அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, ஜிஎல்பியின் முன்னாள் நிர்வாகி ரமேஷ் அல்லி கூறியதாவது:

கோர்க்கா அமைப்பின் தலைவர் விமல் குருங்கின் அலுவலகத்தில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதையடுத்து, காவல்துறையினரின் அத்துமீறலைத் தடுப்பற்காக, கோர்க்காலாந்து படையை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக, அந்தப் படையில் அதிக இளைஞர்களைச் சேர்ப்பற்குத் திட்ட மிடப்பட்டுள்ளது.

அவர்கள், ஒருபோதும் மத்திய அர சுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட மாட்டார்கள். எங்கள் தாய்நாடான இந்தி யாவைப் பெரிதும் நேசிக்கிறோம். எனினும், எங்களது அடையாளத்தை மீட்பதற்காகவே தனிமாநிலக் கோரிக்கையை வலியுறுத்திப் போராடுகிறோம் என்றார் அவர்.

தவறாக வழிநடத்துகிறார் மம்தா - விமல் குருங்: கோர்க்கா அமைப்பினரின் போராட்டம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவிக்கிறார் என்று கோர்க்கா அமைப்பின் தலைவர் விமல் குருங் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

வடகிழக்கு மாநிலங்களிலும், சில வெளிநாடுகளிலும் உள்ள சில தீவிர வாத அமைப்புகளின் ஆதரவுடன் இந் தப் போராட்டம் நடைபெறுவதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. மக்களைத் தவறாக வழிநடத்த அவர் முயலுகிறார்.

இது, அரசியல் போராட்டம் அல்ல. தனிமாநிலம் கிடைக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner