எழுத்துரு அளவு Larger Font Smaller Font


உ.பி. முதல் அமைச்சர் ஆதித்தியநாத் மீதான கலவர  வழக்கின் விசாரணை மீது  நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?  என  மாநில அரசை அலகாபாத் உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து மூன்று வாரத்திற்குள் பதில் அளிக்கவேண்டும்  என வரையறுத் துள்ளது.

2007 கோரக்பூரில் முஸ்லிம்களுக்கு எதிராக  அன்றைய  நாடாளுமன்ற உறுப்பினர் ஆதித்திய நாத்தும், அவரது  வாஹினி  அமைப்பும் முஸ்லிம்களின்  ஊர்வலத்திற்கு எதிராக   கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தியது.

அப்போது ஆதித்திய நாத்தும், அவரது  கூட்டத்தினரும் வெறிக் கூச்சல் எழுப்பி முஸ்லிம்களுக்கு எதிராக முழக்கங்களை   எழுப்பினர். அதனைத் தெடர்ந்து காவல்துறை ஆதித்தியநாத் தைக் கைது செய்து  ஊரடங்கு உத்திரவு பிறப்பித்தது. பிரிவு 153ஏ, 146, 147, 279, 506இல் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

ஆதித்தியநாத்  கைதால்  ஆத்திர மடைந்த அவரது கும்பல்  ரயில் நிலையத் தில் நின்று கெண்டிருந்த மும்பை - கோரக்பூர் கோதான்  எக்ஸ்பிரஸ்  ரயில் பெட்டிகளைக் கொளுத்தினர். அடுத் தடுத்த நாள்களில் பல மஸ்ஜிதுகள், பேருந்துகள், ரயில்கள், மற்றும் பொது சொத்துக்களுக்குத் தீவைத்தனர்.

கோரக் பூரை  தாண்டி முஸ்லிம் எதிர்ப்பு வன் முறை தியோரியா, பத்ராணா, மகராஜ்கஞ், பஸ்தி, சாந்த் கபீர் நகர், மற்றும் சித்தார்த் நகர் மாவட்டங்களில் பரவியது. ஆதித்தி யநாத் கைது செய்யப்பட்ட மறுநாள் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட் டனர். இதன் பின்னணியில் அன்றைய முதல்வர் முலாயம் சிங் இருந்தார் என வதந்திகள் பரவின.

அந்தக் குற்றச் சாட்டை உறுதி செய்யும் விதமாக கடந்த இரண்டு ஆண்டுகள்  வரை  (ஆட்சிக் கட்டிலில் இருக்கும் வரை) அகிலேஷ் கூட எதுவும் செய்யவில்லை. அகிலேஷ் யாதவ் அவரது தந்தை முலாயம்சிங் அடிச்சுவட்டை இதில் பின்பற்றுகிறார், சங்பரிவார்   கும்பலுக்கு எதிராக எவ்வித நீதி மன்ற நடவடிக்கையும் எடுக்காமல் பார்த்துக்கொண்டார் என இது தொடர் பான வழக்கு தொடர்ந்த ரிஹாய மஞ் குற்றம்   சாட்டியது.

கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடியது தொடர்பாக ரிஹாயமஞ் சார்பாக சமூக செயற்பாட் டாளர்கள் பர்வேஸ் மற்றும் ஆசாத் முதல் தகவல் அறிக்கை ஆதித்தியநாத் வகை யறாக்கள் மீது பதிவு செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டதை அலகாபாத் உயர் நீதிமன்றம் ஏற்றுக்கெள்ளவில்லை.

எனினும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153ஏ யின் படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை  என அது தொடர்பாக மூன்று வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உ.பி. அரசுக்கு அலகாபாத் உயர்நீதிமன் றம்  கேள்வி எழுப்பியுள்ளது.  இவை முறையாக மட்டும் நடந்தால்  கலவர  கிரி மினல் குற்றச்சாட்டு தொடர்பாக சிறைக்கு செல்லும் முதல் முதல் அமைச்சர் என்ற புகழை(!) ஆதித்தியநாத் பெறக்கூடும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner