எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திருமலை, மே 8 ஆந்திர மாநில தீயணைப்புத்துறை இயக்குனர் சத்தியநாராயணா செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ஆந்திர மாநில தீயணைப்புத் துறையில் தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பேரிடர் மீட்பு சமயங்களில் மீட்பு பணி களை துரிதப்படுத்த இன்னும் 10 நாட்களில் புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட உள்ளது.

இதன் மூலம் எந்த இடத்தி லாவது தீ விபத்து, இயற்கை சீற்றம் ஏற்பட்டாலோ உடனடி யாக மீட்பு பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் அந்த பகுதியின் போட்டோ எடுத்து செயலிக்கு அனுப்பினால் தீயணைப்பு துறைக்கு சம்பந்தப்பட்ட பகுதி யின் வரைபடத்துடன், அங்கு செல்வதற்கான விவரமான தகவல் கிடைத்துவிடும்.

அதன் அடிப்படையில் குழு வினர் அங்கு விரைந்து செல் வார்கள். ஜிபிஎஸ் உதவியுடன் இந்த செயலி செயல்படுவதால் மீட்பு பணிகள்விரைவாகும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner