எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப். 19- -பிரதமர் நரேந்திரமோடி தமிழக விவ சாயிகளை சாட்டையால் அடிப் பது போல நூதனப் போராட் டம் ஒன்றை, டில்லியில் அய் யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் நடத்தினர்.

தமிழக விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங் கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன் ரூ. 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும்; தமிழகத்திற்கு வறட்சி நிவா ரணமாக ரூ.39 ஆயிரம் கோடி வழங்கவேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து, அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் கடந்த 35 நாட்களாக டில்லிஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக, பிரதமர் நரேந் திரமோடி நேரில்அழைத்துப் பேசி, நம்பிக்கையான உறுதி மொழியை அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட் டோம் என்று அவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தின் 36-ஆவது நாளான செவ்வாயன்று, பிரத மர் மோடி போன்ற வேட மணிந்த ஒருவர் விவசாயி களை சாட்டையால் அடிப்பது போன்றும் அப்போது விவசாயிகள் தங்களை காப்பாற்றுங் கள் காப்பாற்றுங்கள் என்று கதறுவது போலவும் சித்த ரித்து மற்றுமொரு நூதனப் போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். அப்போது பேசிய அய்யாக்கண்ணு, அத்தனை விதமான நூதன போராட்டங் களையும் நடத்தி விட்டோம்; பிரதமர் மோடி இனிமேலும் எங்களை கண்டு கொள்ளா விட்டால் தூக்கில் தொங்க வேண்டியது தான், வேறு வழியே இல்லை என்றார்.

சாட்டையால் அடிக்கும் போராட்டத்தின் போது விவ சாயி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனிருந்த விவ சாயிகள் அவர்முகத்தில் தண் ணீர் தெளித்து ஆசுவாசப் படுத்தி மயக்கத்தை தெளிய வைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner