எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஏப். 16- லக்னோ,  உத்தரபிரதேச முன்னாள் முதல் அமைச்சரும், சமாஜ்வாடி தலை வருமான அகிலேஷ் யாதவ் லக்னோ நகரில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

ஒன்றுசேர்ந்து கோரிக்கை மின்னணு வாக்குப்பதிவு எந்தி ரங்களில் முறைகேடு நடை பெறுவது தொடர்பாக சில எதிர்க்கட்சி தலைவர்களை சந் தித்து பேசினேன். அதே நேரம் இந்த விஷயத்தை பொறுத்த வரை அனைத்து எதிர்க்கட்சி களும் ஒன்று சேருவது அவசி யமாகும். அனைவரும், இனி வரும் தேர்தல்கள் அனைத்தும் வாக்குச்சீட்டு முறையில் நடத் தப்பட வேண்டும் என ஒன்றாக கோரிக்கை விடுக்கவேண்டும்.

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்தால், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்பதை கட் சிகள்தான் நிரூபித்து காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சவால் விடுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பான அனைத்து தகவல் களும் தேர்தல் கமிஷனிடம்தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது இது எவ்வாறு சாத்திய மாகும்? வாக்குப்பதிவு எந்தி ரங்களின் சிப் மற்றும் மென் பொருளில் முறைகேடு செய்ய முடியாது என்பதை தேர்தல் ஆணையம்தான் நிரூபிக்க வேண்டும்.

2019ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்ப்பதற்காக மற்ற கட்சிக ளுடன் கூட்டணி அமைக்க தயங்கமாட்டோம்.

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மக்களை சாதி, மத அடிப்படையில் பிளவு படுத்தி வெற்றிகண்டுவிட்டது. தற்போது மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் அரசு, முன்பு சமாஜ்வாடி அரசு பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி யைத்தான் பயன்படுத்தி வரு கிறது.

நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள் மீதெல்லாம் விசா ரணை நடத்தப்போகிறார்க ளாம். அதை தாராளமாக செய் யட்டும். ஏனென்றால் இது போன்ற திட்டங்களையெல் லாம் அவர்கள் தங்களது வாழ் நாளில் கண்டிருக்கவே மாட் டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

2019ஆம் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதி ராக அனைத்து எதிர்க்கட்சி களும் ஒன்று சேரவேண்டும் என்று நேற்று முன்தினம் பகு ஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்த நிலை யில், அதே கருத்தை அகிலேஷ் யாதவும் வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner