எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாய்ப்பால் வங்கிகள் குறித்து வழிகாட்டும் நெறிமுறைகள் உருவாக்க நடவடிக்கை
புதுடில்லி, மார்ச் 19 தாய்ப்பால் வங்கிகள் குறித்து தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் நடவடிக் கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மக்களவையில் கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் ஃபக்கன் சிங் குலஸ்தே கூறியுள்ளதாவது: நாட்டில் மத்திய அரசின் சார்பில் தாய்ப்பால் வங்கி எதுவும் செயல்படவில்லை. எனினும், தாய்ப்பால் வங்கிகள் குறித்து தேசிய அளவிலான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிக்கும் பிரசாரத்தின் முக்கிய அங்கமாக இந்த வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கும் என்றார் அமைச்சர். முன்னதாக, குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிக்கும் பிரசாரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார்.


ரூ.100க்கு கீழ் வரி பாக்கி தள்ளுபடி
இதனிடையே, ரூ.100 மற்றும் அதற்கு கீழ் உள்ள வருமான வரி பாக்கிகளை தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 21.54 லட்சம் பேரின் வரி பாக்கி தள்ளு படியாகவிருக்கிறது என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறியுள்ளார்.


இணையவழியில் ராணுவ நுழைவுத் தேர்வு
ராணுவத்தின் பல்வேறு நிலை களில் உள்ள பணியிடங்களுக்கான நுழைவுத் தேர்வை இணையவழியில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற ராணுவ நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததைத் தொடர்ந்து மேற்கண்ட முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


விசைத்தறியாளர்கள் நலன் காக்க புதிய திட்டம்
ஜவுளித் துறை இணையமைச்சர் அஜய் டம்டா கூறியதாவது:
ஆந்திரம் உள்பட பல்வேறு மாநிலங்களில் விசைத்தறியாளர் களின் நலன்களை காப்பதற்காக புதிய திட்டத்தை மிக விரைவில் தொடங்கவிருக்கிறோம். மின்விநியோகம் சீராக இல்லாதது, நூல் உள்ளிட்ட பொருள்கள் போதிய அளவில் கிடைக்காதது போன்ற பிரச்னைகளை, விசைத்தறியாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.


இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய திட்டம் அமையும். ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு துறையை மேம்படுத்துவதற்காக சிறப்பு நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.  விசைத்தறி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அமைச்சர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner