எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, மார்ச் 12 உத்தரப் பிரதேசம், உத்தரா கண்ட் உள்ளிட்ட மாநிலங் களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித் துள்ள நிலையில், கர்நாட காவில் பாஜகவை வெற்றி பெற விட மாட்டோம் என அம்மாநில முதல்வர் சித்த ராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் சித்த ராமையா கூறியதாவது:

உத்தரப் பிரதேச தேர்தல் வெற்றி பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு கிடைத்த வெற்றியாக கூற முடியாது. சாதி, மதத்தின் பெயரால் மக்களை கூறுபோட்டு, தந் திரமாக வாக்குகளை பெற் றுள்ளனர். 5 மாநில தேர்தலில் ஆளும் கட்சி மீதான அதி ருப்தியை மக்கள் வெளிப் படுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே மற்ற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. நாடா ளுமன்ற தேர்தலில் மோடி அரசுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
வேடிக்கையாக இருக்கிறது

உத்தரப் பிரதேசத்தில் பெற்ற வெற்றியை வைத்துக் கொண்டு காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கு வோம் என பாஜக வினர் பேசிவருவது வேடிக்கை யாக இருக்கிறது. டில்லிக்கு பக்கத்தில் உள்ள பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை கைப் பற்றி யுள்ளது. இதேபோல கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைப்ப தற்கான வாய்ப்புகள் இருக் கின்றன.

கர்நாடகாவை பொறுத்த வரை காங்கிரஸ் வலுவாக உள்ளது. இங்கு பாஜக தலை வர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி 2 தொகுதிகளில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். எடியூரப்பா என்ன தந்திரம் செய்தாலும் நிச்சயம் பாஜக வால் இங்கு ஆட்சியை பிடிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner