எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2016ஆம் ஆண்டில் நாடு முழுவதும்
சிக்குன் குனியாவால் 57 ஆயிரம் பேர் பாதிப்பு

புதுடில்லி, ஜன.9 நாடுமுழுவதும் கடந்த 2016-ஆம் ஆண்டில் சிக்குன் குனியாவால் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2006 ஆ-ம் ஆண்டு சிக்குன்குனியா காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட் டது. தமிழகம், ஆந்திரா, கேர ளாவில் தொடங்கிய சிக்குன் குனியா அடுத்தடுத்த ஆண்டு களில் நாடுமுழுவதும் பரவத் தொடங்கியது. தற்போது டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஏடிஸ் கொசுக்கள் மூலம் பர வும் சிக்குன்குனியாவால் பாதிக் கப்பட்டவர்கள் அதிகப் படி யான காய்ச்சல், கை, கால் களின் மூட்டுக்களில் ஏற்படும் வலியால் அவதிப்பட்டனர்.

நோயின் தீவிரத்தால் ஏராள மானோர் உயிரிழந்தனர். இதை யடுத்து சுகாதாரத்துறை எடுத்த தடுப்பு மற்றும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளால் தமிழகம், ஒடிசா, கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங் களில் பாதிப்பு குறையத் தொடங்கியது. ஆனால் டில்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா அரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சிக்குன்குனியா வால் பாதிக்கப்படுபவர்களின் எண் ணிக்கை அதிகரித்தது.

டில்லியில் கடந்த சில மாதங் களில் மட்டும் சிக்குன்குனியா வால் ஆயிரக்கணக் கானோர் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந் துள்ளனர். டில்லி உட்பட நாடுமுழுவதும் சிக்குன்குனியா பாதிப்பை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உட னடியாக சிகிச்சை அளிப்பதற் கான நடவடிக் கைகளையும் சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

கருநாடகா முதலிடம்

இந்நிலையில் கடந்த ஆண்டு (2016) ஜனவரி ஒன் றாம் தேதி முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான சிக்குன்குனியா பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில், 2016ஆ-ம் ஆண்டில் நாடு முழுவதும் 57 ஆயிரத்து 694 பேர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டி லேயே அதிகபட்சமாக கருநாட காவில் 13 ஆயிரத்து 239 பேரும், டில்லியில் 12 ஆயிரத்து 221 பேரும், மகாராஷ்டிராவில் 7 ஆயிரத்து 354 பேரும், அரியா னாவில் 5 ஆயிரத்து 336 பேரும், பஞ்சாப்பில் 4 ஆயிரத்து 299 பேரும் சிக்குன்குனியாவால் பாதிக்கப் பட்டனர்.

தமிழகத்தில் 72 பேரும், ஆந்திராவில் 924 பேரும், கேர ளாவில் 123 பேரும் பாதிக்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவ ரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிடவில்லை. கடந்த சில ஆண்டுகளைவிட 2016-ஆம் ஆண்டில் அதிகபட்ச மாக நாடுமுழுவதும் சிக்குன் குனி யாவால் 57 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பாதிக்கப்பட்டுள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner