எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புவனேஸ்வர், ஜன. 7- ஒடிசா மாநிலத்தின் கலாஹன்டி மாவட்டத் தில் மனைவியின் பிரேதத்தை சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல முடியாததால் கொட்டும் மழையில் தானா மாஜி என்பவர் சுமார் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு அந்தப் பிணத்தை தோளில் சுமந்து சென்ற செய்தி கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த சோகம் அடங்கும் முன்னர், இதே ஒடிசா மாநிலத்தில் மேலும் ஒரு பெருஞ்சோகம் அரங்கேறியுள்ளது.

இங்குள்ள அன்குல் மாவட்டத்தை சேர்ந்த கட்டி திபார் என்பவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தனது அய்ந்து வயது மகள் சுமி-யை பலஹரா சுகாதார மய்ய மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி கடந்த 4-ஆம் தேதி அந்த சிறுமி உயிரிழந்தாள். ஆனால், மகளின் பிணத்தைத் தனியார் வாகனத்தில் ஏற்றி சொந்த ஊருக்கு கொண்டுசெல்ல பொருளா தார வசதி இல்லாததாலும், அரசின் இலவச அமரர் ஊர்தி வசதி செய்து தரப்படாததாலும், 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தனது வீட்டுக்கு மகளின் பிணத்தை தோளில் சுமந்தபடி கட்டி திபார் நடந்து செல்லும் வீடியோ காட்சி நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, பலஹரா சுகாதார மய்ய மேலாளர் மற்றும் காவலரை இடைநீக்கம் செய்து அன்குல் மாவட்ட ஆட்சியர் அனில் குமார் சமால் உத்தரவிட்டுள்ளார்.

மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்

கோடியக்கரை, ஜன. 7- கோடியக்கரை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கம்பு, கயிறால் தாக்கியதாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஜிபிஎஸ் கருவி, செல்போன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள மீன்களையும் பறித்துச் சென்றுள்ளனர்.

பெண்களுக்கு தலா ரூ.1,000 உதவி தொகை

அய்தராபாத், ஜன. 7- தெலுங்கானா மாநிலத்தில் தனியாக வாழும் பெண்களுக்கு தலா ரூ.1,000 மாதாந்திர உதவி தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் தனியே வாழும் பெண்கள் எத்தனை பேர் என கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை 23ஆம் தேதி கூடுகிறது

சென்னை, ஜன. 7- தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 23ஆம் தேதி கூடும் என்று தெரிகிறது. அன்றைய தினம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றுவார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒவ்வோர் ஆண்டும் தொடக்கத்தில் ஆளுநர் உரையுடன் கூடுவது மரபு. அதன்படி, 2017ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் வருகிற 23ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடலாம் என்று தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

அன்றைய தினம் கூட்டம் தொடங்கியதும், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையாற்றுகிறார். ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட உரையை ஆளுநர் படித்து முடித்ததும், அதன் தமிழ் உரையை சட்டப்பேரவைத் தலைவர் படிப்பார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த மாதம் 5ஆம் தேதி மறைந்ததை தொடர்ந்து, தமிழகத் தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றபின் நடைபெறும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆளுநர் உரையில் தமிழக அரசின் புதிய திட்டம், அதற்கான நிதி குறித்த விவரங்கள் இடம்பெறும். ஆளுநர் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அதிகபட்சமாக 3 அல்லது 4 நாட்கள் நடைபெறலாம். அதைத் தொடர்ந்து, பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு மார்ச் மாதம் 2017--2018ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட் தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner