எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஜன. 5- உ.பி, பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதி களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வரு கிறது. பஞ்சாப்பில் அகாலி தளம் பாஜக கூட்டணி ஆட்சி யும், மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியும், கோவாவில் பாஜக கூட்டணி ஆட்சியும், உத்தர கண்டில் காங்கிரஸ் ஆட்சியும் நடக்கிறது.  இந்த 5 மாநிலங் களுக்கும் சட்டப்பேரவை தேர் தலை நடத்த தேர்தல் ஆணை யம் முடிவு செய்தது.

உத்தர பிரதேச சட்டப் பேரவை பதவிக்காலம் மே மாதம் 27ஆம் தேதியுடன் முடி வடைகிறது. கோவா, மணிப் பூர், பஞ்சாப், ஆகிய 3  மாநி லங்களின் சட்டசபை பதவிக் காலம் மார்ச் மாதம் 18ஆம் தேதி முடிகிறது. உத்தரகாண்ட்  சட்டபேரவையின் பதவிக் காலம் மார்ச்  மாதம் 27ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து இம்மாநிலங் களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நேற்று அறிவித் தார். அவருடன் மற்ற இரு தேர் தல் ஆணையர்களான ஏ.கே. ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது நஜீம் ஜைதி கூறியதாவது:

பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில்  பிப்ரவரி 4ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. உத்தரப் பிரதே சத்தில்  பிப்ரவரி 11ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல்  நடக் கிறது. உத்தரகாண்டில் பிப்ரவரி 15ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்  நடக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் மார்ச் 4, மார்ச் 8 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது. அனைத்து மாநிலங் களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 11ஆம் தேதி எண்ணப் படும். அன்று பிற்பகல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 690 சட்டசபை தொகுதி களில் 16 கோடிக்கும் அதிக மான வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் கோவாவில் ஜனவரி 5, மணிப்பூரில் ஜனவரி 12, பஞ்சாபில் 5, உத்தரகண்டில் 10, உத்தரபிரதேசத்தில் 12ஆம் தேதிகளில் வெளியிடப்படும்.

தேர்தல் நடைபெறும் மாநி லங்களில் நடத்தை விதிமுறை கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

தேர்தலில் பணப்பட்டுவா டாவை தடுக்கவும், வேட்பாளர் களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் தனிப்படை கள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு நஜீம் ஜைதி அறிவித்தார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner