Banner
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஆக. 23- ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் போட்டிக்காக பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற எனது சாதனையை எண்ணி எனக்கே பெருமையாக உள்ளது என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.

லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், வெண்கலப்பதக்கம் வென்றார். மேலும் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் வெண்கலப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மேற்கண்ட இரு வீராங்கனைகளையும் பாராட்டும் வகையில், ஹெர்பல்லைப் நிறுவனம் தரப்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில் கலந்து கெண்ட சாய்னா நேவால் மற்றும் மேரி கோம் ஆகியேருக்கு ஹெர்பல்லைப் நிறுவனம் சார்பாக ரூ.5 லட்சம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய சாய்னா நேவால், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வகையில் ஆடிய தனது ஆட்டத்தை நினைத்து, பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

பாட்மிண்டன் விளையாட்டில் உலக அளவில் முதல் 10 இடங்களில் சீன வீரர்கள், வீராங்கனைகள் தான் உள்ளனர். எனவே அவர்களுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெறுவது மிக கடினமாக உள்ளது.

பாட்மிண்டன் போட்டிகளில் இந்தியாவுக்காக முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் என்ற எனது சாதனையை எண்ணி, நானே பெருமைப்பட்டு கொள்கிறேன். அதற்காக நடத்தப்படும் பாராட்டு விழாக்களின் மூலம் எனக்கு ஊக்கம் கிடைக்கிறது. வருங்காலத்தில் மேலும் சாதிக்க வேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் சிறந்த உடல்திறனுடன் இருக்க தயாராகி வருகிறேன் என்றார்.



.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh