எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மார்ச் 14- ஆங்கிலேயர் ஆட்சியில் ஏப்ரல் 13, 1919-இல் பஞ்சாபின் ஜாலியன் வாலா பாக்கில் நடந்த படுகொலையில் சுமார் 1600 பேர் கொல்லப் பட்டனர். இதன் நூறாவது நினைவு நாள் வருவதை முன் னிட்டு பிரிட்டிஷ் அரசு இந்த படுகெலைக்கு மன்னிப்பு கேட் கத் தயாராகிறது.

ஆங்கிலேயரிடம் இந்தியா அடிமைப்பட்டிருந்த போது, 1919-இல் ரவுலட் சட்டம் அம லாக்கப்பட்டது. இதை எதிர்க் கும் வகையில், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக் எனும் இடத்தில் ஆயிரக்கணக் கான சீக்கியர்கள் கூடினர். ஏப்ரல் 13, 1919இ-ல் ஞாயிற்றுக் கிழமையான அன்று சீக்கியர் களின் புது வருடமான பைசாக்கி பண்டிகை நாளாகவும் இருந் தது. ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப் போராட்டப் பாடல் களையும் அந்த கூட்டத்தினர் பாடிக்கொண்டிருந்தனர். அங்கு தன் படையுடன் வந்த ஆங்கி லேய அதிகாரியான ஜெனரல் டயர், கூட்டத்தினர் மீது கண் மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 1600-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்திற்கும் அதிமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பிரிட் டிஷ் வரலாற்றில் அவமானமாக இடம்பெற்ற இந்த சம்பவத் திற்கு அந்நாட்டு அரசு மன் னிப்பு கேட்க வேண்டும் என சமீப ஆண்டுகளாகக் குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், அந்த படு கொலை சம்பவம் நடந்து வரும் ஏப்ரல் 13-இல் 100 ஆண்டு முடிய உள்ளது. இதை யெட்டி பிரிட்டிஷ் நாட்டு நாடாளுமன்றக் கூட்டத்தை அதன் அரசு கூட்டுகிறது. இதில், இந்திய வம்சாவளி உறுப்பினர் கள் ஜாலியன்வாலா பாக் சம் பவத்திற்கு பிரிட்டிஷ் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். அந்த சமயத்தின்போது சில இந்தியர்களையும் பார்வையா ளர்களாக அழைக்க இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். இதற் காக, அவர்களில் ஒருவரான லும்பா என்பவர், இந்தியாவின் பிரபல தொழிலதிபரான சஞ்சய் டால்மியாவிற்கு இமெயில் மூலம் அழைப்பு அனுப்பி யுள்ளார்.

இந்த அழைப்பு மெயிலில் குறிப்பிட்டிருப்பதாவது, ஜாலி யன் வாலாபாக் படுகொலை மீது விவாதிக்க வேண்டும் என நான் எழுப்பிய கோரிக்கைக்கு சக உறுப்பினர்களான லார்டு தேசாய், லார்டு பிலிமோரியா, போரன்ஸ் வர்மா, லார்டு சூரி, பரோன்ஸ் நோர்தோவர், லார்டு அல்டன், லார்டு மோர்கன், லோர்டுகோலின் மற்றும் லார்டு மோவ்ஸன் ஆகியோரும் ஆதரவளித்துள்ளனர். இவர்க ளும் அந்த சம்பவத்திற்கு பிரிட் டிஷ் அரசு மன்னிப்பு கோர வேண்டும் என மனப்பூர்வமாக சம்மதித்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி பிரிட்டி ஷில் வாழும் பல்வேறு பொது அமைப்புகள், சீக்கியர்களின் சர்வதேச சங்கங்களும் வலியு றுத்திக் கடிதங்கள் எழுதியுள் ளன. இவற்றையும் ஏற்று ஜாலி யன்வாலா பாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க பிரிட்டிஷ் அரசு தயாராகி வருவதாகத் தெரியவந்துள்ளது. இந்த மன் னிப்பு கேட்கும் நிகழ்வின் போது பிரிட்டிஷ் நாடாளுமன் றத்தில் அழைப்பாளர்களாக முக்கிய இந்தியர்களையும் அழைக்கிறது.

ஜாலியன்வாலா பாக் எனும் மைதானப் பகுதி அமிர் தசரஸில் உள்ள சீக்கியர்களின் பொற்கோயில் அருகே அமைந் துள்ளது. சீக்கியர் ஆட்சியின் கீழ் இந்த மைதானத்தின் உரி மையாளராக ஹிம்மத் சிங் என்பவர் இருந்தார். இவர், தற்போது பஞ்சாபின் ஃபதேகர் சாஹேப் மாவட்டத்தில் உள்ள ஜாலா எனும் கிராமத்தை சேர்ந்தவர். இதனால், அது ஜாலாவாலா மைதானம் என வும், பிறகு அது தோட்டமா கவும் இருந்ததால் பாக் என்றும் அழைக்கப்பட்டது. இந்த பெய ரும் காலப்போக்கில் ஜாலியன் வாலா பாக் என்றாகி விட்டது. ஆங்கிலேயர் நடத்திய படு கொலைக்கு பின் இந்த பகுதி மத்திய அரசின் இந்திய தொல் பொருள் ஆய்வகத்தின் நிர்வா கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner