எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.22 உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த நிலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப் பட்டுள்ள வழக்கின் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வு பிப்ரவரி26 ஆம் தேதி முதல் நடத்துகிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த நில உரிமை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றத் தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் அர சியல் சாசன அமர்வு அமைக்கப் பட்டது. ஆனால் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள் யு.யு.லலித், என்.வி. ரமணா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர். மற்றொரு நீதிபதி எ.ஏ.பாப்டே விடுப்பில் சென்றார்.
இக்காரணங்களால் வழக்கு விசாரணை தாமதமானது. இத னைத் தொடர்ந்து புதிய அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர் வில் தலைமை நீதிபதியுடன், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், விடுப்பில் சென்றிருந்த நீதிபதி பாப்டே பணிக்குத் திரும்பினார்.இதைத் தொடர்ந்து அயோத்தி வழக்கு பிப்ரவரி 26 ஆம் தேதி விசா ரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும் என்று உச்சநீதிமன்றம் புதனன்று தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner