எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.22 -நிலுவைத் தொகையை செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த சோனி எரிக்சன் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத் தின் தலைவர் அனில் அம்பானி தனக்குச் செலுத்தவேண்டிய ரூ.550 கோடியை திருப்பிச் செலுத்தவில்லை என்று கடந்த ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.  அந்த வழக்கில், சோனி எரிக்சன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தும் வரை இந்தியாவை விட்டு அனில் அம்பானியும், உயரதிகாரிகளும் வெளிநாடு செல்ல தடைவிதிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அனில்அம்பானியின் குற்றத்தை ஏற்கெனவே உறுதிப்படுத்திவிட்டது.

டிசம்பர் 15ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டுமென்று கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அனில்அம்பானி உரிய காலத்துக்குள் நிலுவைத்தொகையை செலுத் தாத காரணத்தால், சோனி எரிக்சன் நிறுவனம் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனில் அம்பானி இவ்விவகாரத்தில் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.450 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டும்அல்லது அனில் அம்பானி 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவருக்கு தலா ரூ.1கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேசன் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக் கையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner