எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.22  டில்லிக்கு முழு மாநிலத் தகுதி தர வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் கெஜ்ரிவால் டிவிட்டரில் பல்வேறு பதிவிட் டுள்ளார் அதில், டில்லிக்கு முழு மாநிலத் தகுதி வழங்கும் விவகாரத்தில் எப்படி மோடி அரசு அநீதி இழைத்துள்ளது என்பதை வீடு வீடாக சென்று ஆம் ஆத்மியினர் கூறுவார்கள்.

பிரதமர் மோடி ஏற்கெனவே உறுதி அளித்தப்படி, டில்லிக்கு முழு மாநிலத் தகுதி தர வேண்டும். அருணாச்சல மாநில மக்களின் மாநிலத் தகுதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரதமர் மோடி டில்லிக்கு ஏன் தர மறுக்கிறார்.

சார், டில்லியும் முழு மாநில அந்தஸ்துக்காக காத்திருக்கிறது. டில்லிக்கு முழு மாநில அந்தஸ்து தருவேன் என நீங்கள் உறுதிமொழி கொடுத்தீர்கள். கடந்த 70 ஆண்டுகளாக டில்லி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  இந்தியில் பதிந்துள்ள மற்றொரு பதிவில், பிரதமர் ஆவதற்கு முன்ப முழு மாநில அந்தஸ்து பிரச்சினையை மோடி எழுப்பினார். ஆனால் இன்று அவர் பிரதமர்.

டில்லி மக்கள் இதை நிறை வேற்ற வேண்டும் என அவருக்கு நினைவூட்ட விரும்பு கிறார்கள்.  மக்களவை தேர்தலுக்கு இதுதான் எங்களது முக்கிய கோரிக்கையாகும். இதற்காக பாஜவின் இந்த உறுதிமொழி இடம் பெற்றுள்ள தேர்தல் அறிக்கையை  ஏஏபி தொண்டர்கள் துண்டு பிரசுரங்களை வினியோகிப்பார்கள். இது காவி கட் சிக்கு அதன் முந்தைய உறுதிமொழியை நினைவுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மாண வரணியான, சத்ரா யுவ சங்கர்ஷ் சமிதியினர் இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,  தேசிய தலைநகரில் அதிகாரிகளின் நியமனம், பணியிடமாற்றம் உள்ளிட்டவை மத்திய அரசிடமே இருக்கும் என கூறியுள்ளது. மற்றொரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை அளித்த காரணத்தால் இது கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக் கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner