எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப். 11 -நாட்டில், ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவந்த நேரு, இந்திரா காந்தி பெயரிலான வீட்டுவசதித் திட்டங்களை, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பெயரில் மோடி அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியது.

அனைவருக்கும் வீடு என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று கூறிய மோடி அரசு, 2022-க்குள் நாடு முழுவதும் 1 கோடி வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவித்தது. 2019-க்குள் 70 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்றும் இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்நிலையில், திட்டம் துவங்கப்பட்ட 2015-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான 4 ஆண்டுகளில், 10 லட்சத்து 40 ஆயிரம் வீடுகள் மட்டுமே கட்டித்தரப்பட்டுள்ளதாக, மத்திய அரசே புள்ளிவிவரம் அளித்துள்ளது.இதில், அடங்கி யுள்ள இன்னொரு மோசடி என்னவென்றால், இந்த 10 லட்சம் வீடுகளில், 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டுமானம் துவங்கப் பட்ட வீடுகளும் அடக்கமாம். மோடியின் அனைவருக்கும் வீடு திட்டமும் ஏமாற்றுத் திட்டமாக முடிந்துள்ளது.

நாட்டில் 92 ஆயிரம் ஓராசிரியர் பள்ளிகள்

நாடாளுமன்றத்தில் தகவல்

புதுடில்லி, பிப். 11 -நாடு முழுவதும், 92 ஆயிரம் பள்ளிகள், ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு மட்டுமே நடப்பது தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள் விக்கு, மத்திய அரசு இந்த பதிலை அளித்துள்ளது.நாட்டி லுள்ள 92 ஆயிரத்து 275 ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடு நிலைப்பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தில்தான் இதுபோன்ற ஓராசிரியர் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. அடுத்தடுத்த இடங்களில் உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உள்ளன. நாட்டின் தலைநகரான டில்லியிலும்கூட 5 ஓராசிரியர் பள்ளிகள் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner