எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மக்களவையில் முகம்மது சலீம் விளாசல்!

புதுடில்லி, பிப். 10 -இந்திய வங்கிகளை சூறையாடிவிட்டு வெளிநாட்டில் பதுங்கியிருப்ப வர்களை, மீண்டும் இந்தியா கொண்டு வருவதாக சொல்லும் மோடி அரசு, கடிதச் செலவு என்ற பெயரில் மட்டும் ரூ. 435 கோடியை செலவிட்டு உள்ளது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, வியாழனன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முகம்மது சலீம் பேசியிருப்பதாவது:

நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது. நாட்டிலுள்ள செல்வத்தில் 50 சதவிகிதம், வெறும் ஒன்பது கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குச் சென்றிருக்கிறது. மக்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்தி ருக்கிறது. விவசாயிகளுக்கு, அவர்களின் விளைபொருள்களுக் கான குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லை. வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்திருக் கிறது. இதுதொடர்பாக 2016-2017-ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக் கையை கூட பாஜக அரசுவெளியிடவில்லை. இன்னமும் தரவு களைச் சேகரித்துக் கொண்டிருப்பதாக அரசுத்தரப்பில் கூறப்படு கிறது. இதிலிருந்து நாட்டின் உண்மை நிலை மைகளை சொல் வதற்குக் கூட இந்த அரசாங்கம் அஞ்சுவது நன்கு தெரிகிறது.

பிரதமர் மற்றும் அமைச்சர்களால் பயனடைந்தவர்கள் வெளிநாடுகளுக்குப் பறந்தோடி விட்டார்கள். அவர்களை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்காக இந்த அரசாங்கம் 435 கோடி ரூபாய்க்கு இதுவரை கடிதங்கள் மட்டுமே எழுதியிருக்கிறது.அதேபோன்று பெண்குழந்தைகளைக் காப் போம், பெண்குழந்தைகளைப் படிக்க வைப்போம் திட்டத்திற்காக ஒதுக்கப் பட்ட தொகையில் 56 சதவிகிதம் வெறும் விளம்பரத் திற்காக மட்டுமே செலவு செய்யப்பட்டிருக்கிறது.நாட்டில் வேலை யில்லாக் கொடுமைஇந்த அரசின் ஆட்சியில் அதிகரித்திருக்கிற அளவுக்கு முன்னெப்போதும் இருந்த தில்லை. மாணவர்களின் கல்வி உதவித் தொகையை அதிகரித்திருப்பதாக அரசா ங்கத்தின் தரப்பில் கூறப்பட்டபோதிலும், அவர்களுக்கு முன்பு கிடைத்து வந்த கல்வி உதவித்தொகைகூட தரப்படுவதில்லை. இதனால் மாணவர்கள், கல்வி உதவித்தொகை கேட்டு போராடிக் கொண்டி ருக்கிறார்கள்.சாரதா சீட்டு நிதி நிறுவன ஊழல், நாரதா வழக்குகளில், உச்சநீதிமன்ற கட்டளையின் அடிப்படையிலேயே விசாரணை நடப்பதால், மாநில அரசுகளின் அதிகார வரம்பு எல்லைகளை அது மீறுவதாக ஆகாது. அடுத்தவர்களின் ஊழல் பற்றி பேசும் மத்திய பாஜக அரசு, நாரதா ஊழல் வழக்கு தொடர்பான ஒழுக்கக்கோட்பாட்டுக் குழுவின் கூட்டத்தை இதுவரை நடத்திடவில்லை. ரபேல் ஊழல்தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளின்மீதும் கூட்டு நாடாளுமன்றக் குழுவையும் அமைத்திடவில்லை. இந்நிலையில், இந்த அரசாங்கம்ஊழலை எந்தவிதத்தில் ஒழிக்கப் போகிறது? என்று நான் கேட்க விரும்புகிறேன். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது சலீம் எம்.பி. பேசியுள்ளார்.

முட்டை விற்கத்தான் பட்டப்படிப்பு படித்தேனா?

பிரதமருக்கு டில்லி இளைஞர் கேள்வி

புதுடில்லி, பிப்.10- டில்லி அருகிலுள்ள நொய்டாவைச் சேர்ந்தவர், 21 வயது இளைஞர் சாகர். பி.காம். பட்டதாரியான இவர், டயாலிசிஸ் செய்ய வேண்டிய அளவிற்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட தந்தையை வைத்துக் கொண்டு, அன்றாட பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார். தற்போது பொருத்தமான வேலை கிடைக்காமல், டில்லியின் சாலை யோரத்தில் முட்டை விற்றுக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில், 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று பிரதமர் கூறியது என்னாயிற்று? என்று சாகர் கேள்வி எழுப்பி யுள்ளார். தன்னைப் போன்றவர்களுக்கு மோடி அரசால் எந்த நன்மையும் இல்லை என்று கூறியிருக்கும் அவர், நான் பட்டப் படிப்பு படித்தது, முட்டை விற்கத்தானா? எனவும் ஆவேசப் பட்டுள்ளார். இவருக்கு 2 தங்கைகளும் உண்டு.

அதேபோல, டில்லி துக்ளகாபாத் குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் சீமா. 24 வயதாகும் இவரும் ஒரு பட்டதாரிதான். தட்டச்சு மற்றும் கணிதத்தில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். வேலை கிடைக்காத இவர், பகுதிநேரமாக ஒரு வீட்டில் சமையல் வேலை பார்த்து வருகிறார்.இவரும் 2 கோடி வேலைவாய்ப்பு எங்கே? என்று மோடி அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தன்னைப்போல ஏராளமான பட்டதாரிகள், சாலை யோர கடைகளில் கூலிக்கு வேலைபார்த்து பிழைப்பு நடத்து வதாகவும், தங்களை ஆட்சியாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner