எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டிவிட்டர் இந்தியா நிர்வாகத்தின் சார்பில் விளக்கம்

டில்லி, பிப்.10 அரசியல் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில்லை  எனும் கொள்கையின் அடிப்படையில் இயங்கிவருகிறோம் என்று டிவிட்டர்இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது. பன்னாட்டளவில் இயங்கிவருகின்ற முக்கியமான சமூக வலைத்தளங்களாக வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை இருக்கின்றன.  பன்னாட்டளவில் ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பலதுறைகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் இச்சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றனர். இச்சமூக வலைத் தளங்களை கோடிக் கணக்கானவர்கள்  பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் டிவிட்டர் என்பது மிகவும் முக்கியமான சமூக வலைத்தளமாக இருந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் தங்களது எண்ணங்களை பதிவிட டிவிட்டர் ஒரு சிறந்த களமாக உள்ளது.  பணம் கொடுத்து டிவிட்டரில் ட்ரெண்ட்டிங் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. பயன்பாட்டாளர்களின் விவரங்கள் விற்பனை செய்யப்படுவதாக முகநூல்மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், ட்விட்டர் மீது இந்தக் குற்றச்சாட்டு சமீபமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து டிவிட்டர் இந்தியா தன்னுடைய பக்கத்தில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் கருத்துகள் வெளிப்பட வேண்டும், அவர்களது குரல்கள் ஒலிக்க வேண்டும் என்பதே டிவிட்டரின் சேவை. வெளிப்படைத் தன்மை, நம்பகத்தன்மை மற்றும் பாரபட்சமின்மை போன்ற கொள்கைகளை மேற்கொள்வதில் டிவிட்டர் உறுதி பூண் டுள்ளது.  எங்களது டிவிட்டர் விதிகளை அமல்படுத்த, உலக நிபுணத் துவம் வாய்ந்த சர்வதேசக் குழு உள்ளது. அதனால், டிவிட்டர் இந்தியா ஊழியர்கள் விதிமுறைகளை அமல்படுத்துவதில்லை. நியாயத்தையும், பாரபட்சமின்மையையும் அவர்கள் உறுதி செய்வார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 4ஆவது இடத்தில் பயன்பாட்டாளர்கள் அதிகமுள்ள நாடு இது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு நியாயமான தகவல்களை உறுதி செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு பணியில்லை. இந்த தேர்தல் சமயத்தில் அதற்காக தேசிய அளவிலான உரையாடல்களை உறுதி செய்வோம்  என்று டிவிட்டர் இந்தியா நிர்வாகத்தின் டிவிட்டர் பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளது.

அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை அனுமதிப்பதா?

சென்னை அய்.அய்.டி மாணவர்கள் கடும் எதிர்ப்பு

சென்னை, பிப்.10  மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கிவரும் கல்வி நிறுவனம் சென்னை அய்.அய்.டி எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம். பத்ம பூஷன் விருது பெற்ற மருத்துவர் பி.எம்.எக்டேவின் வருகைக்கு சென்னை அய்.அய்.டி. மாணவர்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

கருநாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் பெல்ல மோனப்ப எக்டே. பிரபலமான இருதய மருத்துவரான  இவருக்கு மத்திய அரசின் பத்மவிபூஷன் விருது அளிக்கப்பட்டுள்ளது.

மேட்டர்ஸ் ஆஃப் மேட்டர்ஸ் என்ற தலைப்பில் நடை பெறுகின்ற கருத்தரங்கிற்காக சென்னை அய்.அய்.டி.க்கு மருத்துவர் எக்டே வருகையின்போது, சென்னை அய்.அய்.டி. மாணவர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர்.  அவர் கருத்தரங்கில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, சென்னை அய்.அய்.டி. ஆய்வுக்கல்வி பயிலும் மாண வர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டபடி, அறிவியலுக்கு இறுதியா? ஜாதிப் பிதற்றலா? (ரிப் சயன்ஸ், சாதி ஆஃப் குவாக்ஸ்) என்று குறிப் பிடும் பதாகைகளை ஏந்தி, தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

மருத்துவரான எக்டே தற்போது வளர்ந்து வரும் மருத்துவ விஞ்ஞானத்திற்கு எதிராக அடிக்கடி பேசி வருபவர். அவரை அழைத் துள்ளதன்மூலம், இது தான் அறிவியலை வளர்க்கும் கலையா? என்று மாணவர்கள் கொதிப்படைந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner