எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜன.17 தமிழகத்தில் மேலும் ஒரு மத்தியப் பல்கலைக் கழகம் அமைக்க மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 2 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.

சென்னை செம்மஞ்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகம் 2008-ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கப் பட்டது. அதுபோல திருவாரூர் மாவட்டம், நீலாகுடியில் தமிழ் நாடு மத்தியப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்தப் பல் கலைக்கழகம் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிர தமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டில்லியில் புதன்கிழமை நடை பெற்றது. அப்போது, ரூ.3,600 கோடி மதிப்பில் 13 புதிய மத் தியப் பல்கலைக் கழகங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப் பட்டது.

அடுத்த 36 மாதங்களுக்குள், தமிழ்நாடு, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளம், ஒடிஸா, கர்நாடகம், ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம், அரியானா, குஜராத், பிகார் ஆகிய மாநிலங்களில் இந்தப் பல்கலைக் கழகங்கள் அமைக்கப்படவுள் ளன. ஜம்மு-காஷ்மீரில் மட்டும் 2 பல்கலைக்கழகங்களும், மற்ற மாநிலங்களில் தலா ஒரு பல்கலைக்கழகமும் அமைய வுள்ளது.

இத்தகவலை மத்திய அமைச் சர் பியூஷ் கோயல், டில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner