எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜன.17  சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில், 49 இந்திய பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்துள்ளன.

2019ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலை பிரிட்டன் தலைநகர் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டைம்ஸ் உயர்கல்வி நிறுவனம் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

2019-ஆம் ஆண்டில் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில், முதல் 5 இடங்களில் 1 முதல் 4 இடங்களை சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ளன. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அமைந்துள்ள சிங்குவா பல்கலைக்கழகம் முதலி டத்தில் உள்ளது.

இந்தப் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 49 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இதில் 25 இந்திய பல்கலைக்கழகங்கள், முதல் 200 இடங்களுக்குள் வந்துள்ளன.

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூப் ஆப் சயின்ஸ் 14-ஆவது இடத்திலும், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மும்பை 27ஆவது இடத்திலும் உள்ளன. இந்த 2 பல்கலைக்கழகங்களும் கடந்த ஆண்டு வகித்த இடங்களில் இருந்து ஓரிடம் பின்தங்கியுள்ளன. கடந்த ஆண்டு இப்பட்டியலில் 42 இந்திய பல்கலைக்கழகங்களே இருந்தன.

அந்த எண்ணிக்கை, நிகழாண்டில் 49-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், முதல் 200 இடங்களுக்குள் 17 இந்திய பல்கலைக் கழகங்களே கடந்த ஆண்டு இருந்தன. அந்த எண்ணிக்கையும் தற்போது 25-ஆக அதிகரித்துள்ளது.

இப்பட்டியலில் சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழகங்களே அதிக எண்ணிக்கையில் உள்ளன. அந்த நாட்டைச் சேர்ந்த 72 பல்கலைக்கழகங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ரசியாவை சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டில் 378 பல்கலைக்கழங்களே, இப்பட்டியலில் இருந்தன. அந்த எண்ணிக்கை நிகழாண்டில் 450-ஆக அதி கரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner