எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடி ஆட்சியில் நடந்த 4 என்கவுண்ட்டர்களில் சந்தேகம்

உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழு அறிக்கை

புதுடில்லி, ஜன. 12- -குஜராத்தில் நடைபெற்ற என்கவுண்ட்டர்க ளில், 4 என்கவுண்ட்டர்களில் சந்தேகம் இருப்பதாக, உச்சநீதி மன்றம் அமைத்த சிறப்பு விசா ரணைக்குழு தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் கடந்த 2002 முதல் 2006 வரை, நரேந்திர மோடி ஆட்சியில் 17 என் கவுண்ட்டர்களை, அம்மாநில காவல்துறைஅரங்கேற்றியது. சிறுபான்மையினர் மற்றும் அரசியல் எதிரிகளை தீர்த்துக் கட்டுவதற்கு, காவல்துறையை பயன்படுத்தி, மோடி அரசுதான் இந்த என்கவுன்ட்டர்களை நடத்தியதாக இப்போதுவரை வலுவான குற்றச் சாட்டுக்கள் இருக்கின்றன.

கடந்த 2012-ஆம் ஆண்டு, இதுதொடர்பாக சிறப்பு விசார ணைக்குழு ஒன்றை உச்சநீதி மன்றம் அமைத்தது. உச்ச நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதி பதி ஹர்ஜித் சிங்பேடி தலை மையில் இந்த குழு அமைந்தது. சுமார் 6 ஆண்டுகளாக இந்தக் குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர்.அதன்முடிவில், 2018 பிப்ரவரி 28-ஆம் தேதி, நீதிபதி ஹர்ஜித் சிங் பேடி குழு தனது விசாரணையை இறுதிப்படுத்தி, 230 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை 10 மாதங்களுக் கும் மேலாக ஆய்வுசெய்து வந்த உச்சநீதிமன்றம், ஹர்ஜித் சிங் பேடி குழுவினரின் அறிக் கையை, மனுதாரர்களுக்கு வழங்க சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.இந்நிலையில், குஜராத்தில் மோடிஆட்சியில் நடத்தப்பட்ட 17 என்கவுன்ட்டர் களில் 4 என்கவுன்ட்டர்கள் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக உள்ளன என்று, நீதிபதி ஹர் ஜித் சிங் பேடி குழு அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், சொராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர் வழக்கில் தொடர்புடைய அய்பிஎஸ் அதிகாரி டி.ஜி.வன்சரா-தான், சந்தேகத்திற்கு இடமான 4 என்கவுன்ட்டர் வழக்குகளிலும் தொடர்பு உடையவராக இருக் கிறார் என்றும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. எனினும், என் கவுன்ட்டர்களின் பின்னணியில் இருக்கும் அரசியல் தலையீடு கள் குறித்து, இந்த அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை என்று தெரிகிறது. என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டவர்களின் வாரி சுகள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படை யில், இந்த முடிவுக்கு நீதிபதி ஹர்ஜித் சிங் பேடி குழுவந்துள் ளதாகவும் அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சந்தேகத் திற்கு உரிய 4 என்கவுன்ட்டர் களில் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு இடைக்கால நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டுஅக்டோபரில் என்கவுன்ட்டர் செய்யப் பட்ட சமீர்கான் பதானின் வாரிசுக்கு அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவர், அன்றைய முதல்வர் மோடி யைக் கொலை செய்யத் திட்ட மிட்டார் என்றும்; ஜெய்ஷ் இ முகம்மது என்ற பயங்கரவாத குழுவைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் குற்றம் சாட் டியிருந்தனர் என்பது குறிப்பி டத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner