எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன.11- ஆண் டுக்காண்டு அதிகரிக்கும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கணக் குத் தணிக்கைத்துறை, மத்திய அரசின் தலையில் குட்டியுள்ளது.

கணக்குத் தணிக்கைத் துறையானது  கடந்த 2016-&2017 ஆம் ஆண்டுக்கான செலவுக் கணக்குகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிலேயே, இவ்வாறு கூறியுள் ளது. பல்வேறு துறைகளிலும் நிதிப்பற்றாக் குறை உள்ளது. இதனைப் போக்க சரியான நடவடிக்கை எடுக்க முடியாத அரசு, கடன் வாங்கி சமாளித் துள்ளது. இதனால் அரசுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது. விவசாயத்துறையில் ஏற்பட் டுள்ள பற்றாக்குறைக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிதி திரட்டப்பட்டுள்ளது. நீர்ப்பாச னத்துறை பற்றாக்குறை, நபார்டு வங்கி கடன்மூலம் சரி செய் யப்பட்டுள்ளது.

உணவுக்கட்டுப்பாட்டுத் துறைக்கான நிதிப்பற்றாக் குறை, உணவுக்கழகத்திடம் இருந்து பொருட்களாக பெறப் பட்ட கடன் மூலம் சமன் செய் யப்பட்டுள்ளது. இதுபோலவே ரயில்வே, மின்சாரம் ஆகிய துறைகளின் பற்றாக்குறைகளும் கடன் மூலமே சரி செய்யப்பட் டுள்ளன. பொதுவாக, ஆண்டு தோறும் நிதிநிலை அறிக்கை யில் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. உரத்துக்கு 201620-17இல் ரூ. 78 ஆயிரத்து 335 கோடியாக இருந்த பற்றாக் குறை, அடுத்த ஆண்டில் ரூ. 84 ஆயிரத்து 203 கோடியாக அதிகரித்துள்ளது. அதைத்தவிர பல்வேறு செலவினங்களாக ரூ. 70 ஆயிரத்து 100 கோடி கணக்கில் உள்ளது.எனவே, அதிகரித்து வரும் அரசுத்துறை களின் நிதிப்பற்றாக்குறை மற் றும் கடன் சுமைகளை சரி செய்ய, நிதிநிலை அறிக்கை யில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.இந்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நாடாளுமன்றத் திற்கு தேர்தல் நடைபெற உள்ளதால், மத்திய அரசின் இடைக்கால நிதிநிலைய றிக்கை பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner