எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரதமர் மோடிமீது ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜன.11 ரபேல் விவகாரம் கார ணமாகத்தான் சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மாவை  பிரதமர் மோடி அவசரமாக நீக்கினார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஸ் அஸ்தானா ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திக் கொண்டனர். இதனால், மத்திய அரசு அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு உத்தரவை ரத்து செய்து  உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஅய் இயக்குநராக அலோக் வர்மா நேற்று முன்தினம் மீண்டும் பொறுப்பேற்றார்.

இது குறித்து டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட் டுள்ள பதிவில், சிபிஅய் இயக்குநரை பிரதமர் மோடி அவசரமாக பதவி இறக்கியது ஏன்? நாடா ளுமன்ற தேர்வு குழுவின் முன் சிபிஅய் இயக்குநர் ஆஜராக பிரதமர் அனுமதிக்காதது ஏன்? ரபேல் ஒப்பந்த விவகாரம்தான் இதற் குக் காரணம் என கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner