எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச. 6 எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீதான நிலுவை யில் உள்ள குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக, பீகார் மற் றும் கேரள மாநிலங்களின் ஒவ் வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன் றம் அமைக்க வேண்டும் என் றும், குற்றவாளியாக அறிவிக் கப்படும் நபர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்குரை ஞர் மற்றும் பாஜக நிர்வாகி அஸ்வினி குமார் உபாத்யாய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு தொடர்பான முந்தைய விசாரணையில், எம். பி. மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசா ரிக்க மாவட்ட அளவில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்றும், ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள தால் ஏற்கெனவே அமைக்கப் பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங் களின் எண்ணிக்கையை அதி கரிக்கக் கோரியும் இந்த வழக்கு தொடர்பான சிறப்பு ஆலோ சகராக இருக்கும் மூத்த வழக் குரைஞர் விஜய் ஹன்சாரியா நீதிமன்றத்தில் தெரிவித்திருந் தார். அதைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள எம்.பி. மற்றும் எம்எல் ஏக்களுக்கு எதிரான வழக்குகள் குறித்த விவரங்கள் அனைத்தை யும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்த னர்.

இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே. கவுல் மற்றும் கே. எம். ஜோசப் ஆகியோர் அடங் கிய அமர்வு முன்பு செவ்வாய்க் கிழமை வந்தது.

அப்போது, முன்னாள் மற்றும் தற்போதைய எம்எல்ஏ மற்றும் எம்.பி. களுக்கு எதிராக 4,122 குற்ற வழக்குகள் உள்ளன என்றும், சில வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன என்றும் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், 264 வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளைச் செயல்படுத்த உயர்நீதிமன்றங்கள் தடை விதித் ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதைக் கேட்ட பின்பு நீதி பதிகள் கூறியதாவது:

பீகார் மற்றும் கேரள மாநி லங்களின் அனைத்து மாவட் டங்களிலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். ஏற்கெ னவே சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள், அந்தந்த மாவட்ட சிறப்பு நீதிமன்றங்க ளுக்கு மாற்றப்பட வேண்டும் என்றனர்.

மேலும் இந்த சிறப்பு நீதி மன்றங்கள் அமைப்பது தொடர் பாக பாட்னா மற்றும் கேரள உயர்நீதிமன்றங்கள் டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட் டனர்.

எம்எல்ஏ மற்றும் எம்.பி.க் களுக்கு எதிரான குற்ற வழக்கு களை விசாரிக்க ஓர் மாவட்டத் தில் எத்தனை சிறப்பு நீதிமன் றங்கள் தேவையோ, அதை அமைத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், முக்கியத்துவம் அடிப்படையில் வழக்குகளின் விசாரணையை வேகப்படுத்து மாறும் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner