எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.5 பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கிடையே, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 11ஆம் தேதி தொடங்குகிறது. சபையை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக, 10ஆம் தேதி, அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வருகிற 11ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடப்பதால், தற்போதைய மக்களவையின் முழுமையான கடைசி கூட்டத்தொடர் இதுவே ஆகும். எனவே, இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமான, சுமூகமான கூட்டத்தொடராக நடப்பதை உறுதி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு விரும்புகிறது.

கடந்த காலங்களில், எதிர்க்கட்சிகளின் அமளியால் இரு அவைகளும் முடங்கின. அதனால், ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பல நாட்கள் வீணாக போய்விட்டன. இந்த கூட்டத்தொடரில் அத்தகைய நிலை ஏற்படக்கூடாது என்று இரு அவைகளின் தலைவர்களும் கருதுகிறார்கள்.

எனவே, சபையை சுமுகமாக நடத்துவதற்காக, அனைத்து கட்சி கூட்டத்துக்கு மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் ஏற்பாடு செய்துள்ளார். கூட்டத்தொடருக்கு முந்தைய நாளான 10ஆம் தேதி, இந்த கூட்டம் நடக்கிறது.

அதுபோல், நாடாளுமன்ற மாநிலங்களவையை சுமுகமாக நடத்துவதற்காக, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் அந்த சபையின் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு 10ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளார். டில்லியில் அவரது வீட்டில் இந்த கூட்டம் நடக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner