எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீதிபதி குரியன் ஜோசப் கருத்து

புதுடில்லி, டிச. 4 -மரண தண் டனை, அபூர்வத்திலும் அபூர்வமான வழக்குகளில்தான் அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டவிதியை புறந் தள்ளி விட்டு,தாராளமாக மரண தண் டனைகளை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் கூறியுள்ளார்.

மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு ஒன்றில், குரியன் ஜோசப் விசாரணை நடத் தினார். அப்போது, சட்ட ஆணையத் தின் 262ஆவது அறிக்கையானது, அபூர்வத்திலும் அபூர்வமான குற்றங்கள்தொடர்பான வழக்குகளில்தான் மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்து இருப்பதை சுட்டிக் காட்டினார்.

மேலும், மேலும், குற்றவாளிகளுக்கு உளவியல் மதிப்பீடு அல்லது மனநோய் மருத்துவரைக் கொண்டு குற்றவாளிகளுக்கு மனநிலை பரிசோதனை செய்வதுஆகிய எதையும் மேற்கொள்ளாமல் ஒரு நபர் திருந்தவேமாட்டார், அது சாத்தியமில்லை என முடிவுக்கு வருவதும் அதனைத் தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை அளிப்பதும் சரியானது அல்ல என்றும் குறிப்பிட்டார். நீதிபதி குரியன் ஜோசப், வியாழக்கிழமையுடன் (நவ.29) பணி ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner