எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, நவ. 13- நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 25 நகரங்கள், கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறியதாவது: கடந்த ஓராண் டில் நாடு முழுவதும் 25 நகரங் கள், கிராமங்களின் பெயர்களை மாற்ற உள்துறை அமைச்சகம் அனுமதி தந்துள்ளது.

இதில், கடைசியாக அலகா பாத் பெயரை ‘பிரயாக்ராஜ்’ என்றும் பைசாபாத் பெயரை ‘அயோத்தியா’ என்றும் மாற் றப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ பரிந்துரை உத்தரப் பிரதேச மாநில அரசிடமிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப் பெறவில்லை.

நகரங்களை பொறுத்த வரையில் ராஜமுந்திரியை ராஜமகேந்திரவரம் என்றும் (ஆந்திரா, கிழக்கு கோதாவரி மாவட்டம்), அவுட்டர் வீலரை ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தீவு என்றும் (ஒடிசா, பத்ரக் மாவட் டம்), அரிக்கோட்டை அரீகோடு என்றும் (கேரளா, மலப்புரம் மாவட்டம்), பிந்தாரியை பண்டு -பிந்தாரா என்றும் (அரியானா, ஜிந்த் மாவட்டம்), சம்பூரை சன்பூரி என்றும் (நாகலாந்து, கிப்ஹைரி மாவட்டம்) மாற்ற அனுமதி தரப்பட்டுள்ளது. நாகலாந்தின் திம்மாபூர் மாவட் டத்தில் கசாரிகயானை பீவிமா என மாற்றுவதற்கான பரிந் துரை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மேற்கு வங்க மாநி லத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றும் பரிந்துரையும் நிலுவையில் உள்ளது. இவ் வாறு தெரிவித்தார்.

பெயர் மாற்றக் கோரும் மாநில அரசுகளின் பரிந்துரைக ளுக்கு, விதிமுறைகளுக்கு உட் பட்டு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து வருகிறது. ரயில்வே, தபால் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு துறை ஆட்சேபம் தெரிவிக்காத பட்சத்தில் பெயர்கள் மாற்ற அனுமதி தரப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலங்களின் பெயரை மாற்ற நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின் அடிப் படையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner