எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ. 9- மத்திய அர சுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறைமுக மோத லாக உருவெடுத்து இருக்கிறது. இந்த பிரச்சினையில் ரிசர்வ் வங்கிக்கு ஆதரவாக ஏற்கெ னவே கருத்து தெரிவித்துள்ள காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு ரிசர்வ் வங்கியை சீரழிக்கும் நடவடிக் கையில் ஈடுபட்டு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக உள்ள ரூ.9 லட்சத்து 59 ஆயிரம் கோடியில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு வழங்குமாறு நிதி அமைச்சகம் கேட்டு இருப்பதாகவும், இது மொத்த கையிருப்பில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான தொகை என்றும் ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தது.

இதுபற்றி டுவிட்டர் பக் கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, தனது பொருளா தார கொள்கைகளால் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய பிரதமர் மோடிக்கு ரிசர்வ் வங் கியிடம் இருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கோடி தேவைப்படு கிறது என்றும், இந்த விஷயத் தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் உறுதியாக நின்று தேசத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறி யுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner