எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ.9 தியானப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும், ரவிசங்கரின், 'வாழும் கலை' அமைப்பு நிர்வகிக்கும், 'வைதிக் தர்ம சன்ஸ்தான்' அறக்கட்டளைக்கு சொந்தமாக, மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில், உள்ள, மூன்று மாடி கட்டடத்தை இடிக்க, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரவிசங்கர், மூச்சு, தியானப் பயிற்சி வகுப்புகளை, நாட்டின் பல மாநிலங்கள் மற்றும் உலகின் பல பகுதிகளில் நடத்தி வருகிறார்.திரிணமுல் காங்கிரசை சேர்ந்த, மம்தா பானர்ஜி முதல்வராக உள்ள, மேற்கு வங்க மாநிலம் கொல்கட்டாவில், ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு நிர்வகிக்கும், 'வைதிக் தர்ம சன்ஸ்தான்' அறக்கட்டளை சார்பில், மூன்று மாடி கட்ட டம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டடம், இயற்கை அரணாக விளங்கும், சதுப்பு நிலத்தில் கட்டப்பட் டுள்ளதால், இதை உடனடியாக இடிக்க உத்தர விடக் கோரி, 2016ல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், சதுப்பு நிலத்தில் கட் டப்பட்டுள்ள, கட்டடத்தை இடிக்க, 2017 இல் உத்தரவிட்டது. எனினும், கட்டடம் இடிக்கப்படவில்லை.

இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, இம்மாதம், 12 இல் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, கொல்கட்டா சதுப்பு நில மேலாண்மை ஆணையம் மற்றும் மாநகராட்சிக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.அந்த நாளில், கட்டடம் இடிக்கப் படாமல் இருந் தால், ஆணையம் மற்றும் மாநகராட்சி ஆகியவை, தலா, 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், உத்தரவில் கூறப்பட்டுஇருந்தது.

பசுமை தீர்ப்பாயத்தின் இந்த உத்த ரவை எதிர்த்து, அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி, மதன் பி லோக்குர் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை நிராகரித்தது. இயற்கை சூழலுக்கு எதிராக கட்டப்பட்டுள்ள, கட்டடத்தை இடிக்கும்படி, பசுமை தீர்ப்பாயம் பிறப் பித்த உத்தரவை செயல்படுத்தும் படியும், அந்த அமர்வு தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner