எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி,அக்.12- ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை என்பதால் அதனை வெளியிட முடியாது எனஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து முடிவெடுக்கப்பட்ட விவரத்தை மட்டும் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர். பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங் களை பாஜக மத்திய அரசு கொள்முதல்செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால், முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளது என்றும், பொதுத் துறை எச்ஏஎல்நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறு வனத்துக்கு மத்திய அரசு அளித்தது. இதில் நடந்துள்ள ஊழலை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி பெரும் எதிர்ப்பைக்காட்டி வருகின்றன.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை கோரி உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்குரைஞர்கள் சர்மா, வினீத் தண்டா மற்றும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த தெஹ்சீன் பூனாவாலா உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதனன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது, அதனை வெளியே சொல்ல முடியாது. மேலும் வெளிநாடு களுடனான உறவும் பாதிக்கப்படும். சிலர் அரசியல் ஆதாயம் பெறவே இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார். பின்னர் நீதிபதிகள், ரபேல் போர் விமானத்தின் விலை, ஒப்பந்த விவரம், நிர்ணயிக்கப்பட்ட விலை போன்றவற்றை தெரிவிக்க வேண்டாம். அதேசமயம் முடிவெடுக்கப்பட்ட விவ ரத்தை சீல் வைக்கப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் அரசு 29-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தர விட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை அக்டோபர் 31-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner