எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, செப்.14 சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வந்த 51 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் 2018-2019ஆம் கல்வியாண்டில் 3 படிப்புகளுக்கு மட்டுமே யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அனுமதி அளித்துள்ளது என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சிறீநிவாசன் புதன்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பு:

யுஜிசி-யின் தொலைநிலைக் கல்வி ஒழுங்குமுறை 2017 என்ற படிவத்தின்படி, நாட்டில் உள்ள ஒருசில பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்த முடியும். அதில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று.

இந்தப் புதிய நடைமுறையின்படி, சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் மூலம் வழங்கப்படும் 51 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அனுமதி வழங்க யுஜிசி-யிடம் விண்ணப்பிக்கப்பட்டது. அதில், 3 படிப்புகளுக்கு யுஜிசி அனுமதி அளித்தது. மற்ற படிப்புகளுக்கு சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் அனுமதி அளிக்கப்படும் என யுஜிசி அறிவுறுத்தியது.

அதன்படி, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு யுஜிசி-யிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் ஒரு வாரத்தில் மற்ற படிப்புகளுக்கும் அனுமதி கிடைத்து விடும் என நம்புவதாக பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஜன்தன் கணக்கில் குவிந்த டெபாசிட் உரிய விவரங்களை வழங்க தகவல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி, செப்.14  கருப்பு பணத்தை ஒழிக்க 2016 நவம்பர் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்த காலக்கட்டத்தில் ஜன்தன் கணக்குகளில் டெபாசிட் 80,000 கோடியாக உயர்ந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, பணமதிப்பு நீக்க கால பணிகள், டெபாசிட் முறைகேட்டில் சிக்கிய அதிகாரிகள் யார்?, ஒவ்வொரு வங்கிகளிலும் பழைய நோட்டு டெபாசிட் செய்தது எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை தகவல் உரிமை சட்டத்தில் சமூக ஆர்வலர் சுபாஷ் அகர்வால்  கோரியிருந்தார். இதற்கு ரிசர்வ் வங்கி பதில் தராததால் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார். உரிய விவரங்களை ரிசர்வ் வங்கி அல்லது வங்கிகள் சமர்ப்பிக்க வேண்டும் என தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner