எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.11 ‘‘பெட் ரோல், டீசல் விலை உயர்வு, ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?’’ என காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசு, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட் சிகள் சார்பில் நேற்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் எதிர்கட்சிகள் சார்பில் நேற்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அய்.மு. கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேசிய வாத காங்கிரசு கட்சி தலைவர் சரத் பவார், லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சி தலைவர் சரத் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ராகுல் காந்தி, ராஜ்காட்டிலிருந்து, ஜந்தர்மந்தர் பகு திக்கு பேரணியாக சென்றார். இங்கு நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

கடந்த 2014ஆம் ஆண்டு தேர் தலில் நாட்டு மக்களுக்கு மோடி பல வாக்குறுதிகளை அளித்தார். இளைஞர்கள், விவசாயிகள் மற் றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். மக்கள் அவரை நம்பி, பா.ஜ ஆட்சி அமைய உதவினர். ஆனால் இன்று வேலை வாய்ப்பு இல்லை, விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர், பெண்களுக்கு எதி ரான வன்முறைகள் அதிகரித்துள் ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந் துள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால், பிரதமர் மோடி அதற்கு பதில் அளிக்காமல் மவுன மாக இருக்கிறார்.

அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 70 ஆண்டுகளில் ஒன்றுமே நடக்கவில்லை என கூறும் மோடி, 4 ஆண்டுகளில் எல்லாவற்றையும் செய்வோம் என்றார். அது உண்மை. அவர் 4 ஆண்டுகளில் செய்தது எதுவும், கடந்த 70 ஆண்டுகளில் நடக்கவில்லை. எங்கு பார்த்தாலும் ஒருவர் மற்றொருவருடனும், ஒரு மதத்தை சேர்ந்தவர் இன்னொரு மதத்தினருடனும், ஒரு ஜாதியைச் சேர்ந்தவர், மற்றொரு ஜாதியைச் சேர்ந்தவருடனும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மாநி லம், மற்றொரு மாநிலத்துடன் மோதிக் கொண்டிருக்கிறது. எங்கு சென்றாலும் அவர்கள் மக்களை பிரிக்கின்றனர்.

அடுத்த தேர்தலில் எதிர்கட்சி களாகிய நாம் ஒரு கொள்கையுடன், ஒன்றாக இணைந்து பா.ஜ.வை தோற்கடிக்க வேண்டும். நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வேதனை பற்றி இங்குள்ளவர்கள் பேசுகிறோம். ஆனால் இது பற்றி பிரதமர் பேசுவதில்லை என்பது துரதிருஷ்டம். இதுதான் அவர்க ளுக்கும், நமக்கும் உள்ள வித்தி யாசம். நாட்டு மக்கள் என்ன விரும்புகின்றனர் என்பது பற்றி பிரதமர் மோடி பேசுவது இல்லை. அவர் எந்த உலகத்தில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறார். இதைப் பார்த்து, பார்த்து நாடே வெறுத்து விட்டது.

விவசாயிகள் முன்னேறுவதற்கு வழியில்லை. பிரதமரின் நட்பு முதலாளிகள் 15 முதல் 20 பேர் மட்டும் முன்னேறிக் கொண்டிருக் கின்றனர். ரபேல் ஒப்பந்தம் மூலம் மக்களிடம் இருந்து ரூ.45 ஆயிரம் கோடியை பறித்து, பிரதமர் மோடி அவரது நண்பருக்கு கொடுத் துள்ளார். உயர்மதிப்பு கரன்சி தடை, ஜிஎஸ்டி ஆகியவற்றை கொண்டு சிறு வர்த்தகங்களை மோடி ஒழித்தார். என்ன கார ணத்துக்காக உயர்மதிப்பு கரன்சி தடை கொண்டு வரப்பட்டது என் பதை புரிந்து கொள்ள முடிய வில்லை. இதன் மூலம் கருப்பு பணம் ஒழிக்கப்படும் என பிரதமர் கூறினார். ஆனால் எல்லா திருடர் களின் கருப்பு பணமும், இந்த நடவடிக்கையால் வெள்ளையா னது. தொழிலதிபர்களை கேட் டால் ஜிஎஸ்டியால் ஊழல் அதி கரித்துள்ளது என்கின்றனர். ஆனால் மோடி இதுபற்றி வாய் திறப்பதில்லை. இதுதான் நாட் டின் உண்மை நிலவரம். எதிர்கட் சிகளாகிய நாங்கள் ஒன்றாக இணைந்து பா.ஜவை தோற்கடிப் போம் என இங்கிருந்து உறுதி அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner