எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.10 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய குழந்தைகள் விருதுகளுக்கான விண்ணப் பங்கள் தகுதியான குழந்தை களிடம் இருந்து வரவேற்கப்படு கின்றன என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், இதற்கான விண் ணப்பத்தை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவித் துள்ளது.

இந்த விருது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், “குழந்தைகளின் வீர, தீர செயல்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

தன்னுடைய முன்னேற்றம், பாதுகாப்பு, நலனுக்காக போரா டும் குழந்தைகள் மற்றவர் களை யும் ஊக்குவிக்கிறார்கள்’ என்றார்.

தேசிய குழந்தைகள் விருது, தேசிய குழந்தைகள் நலன் விருது என இரு வகையான விருது களுக்கு விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறன.

தேசிய குழந்தைகள் விருது பெறுபவருக்கு சான்றிதழ் வழங் கப்படுவதோடு, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும், ரூ. 10,000 மதிப்பிலான புத்தகக் கூப்பனும் வழங்கப்படும்.

குழந்தைகள் நலம், பாது காப்பு, முன்னேற்றம் ஆகிய துறைகளில் பாராட்டத்தக்க பங் களிப்பை அளித்தவர்களுக்கு தேசிய குழந்தைகள் நலன் விருது வழங்கப்படுகிறது.

தகுதியான தனிநபர் மற்றும் நிறுவனங்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருது பெறுவோருக்கு சான்றிதழ் உடன் ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.


5 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்

பணியிடங்கள் காலி

சென்னை, செப்.10-  தமிழகத்தில் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் 5 மாதங்களுக்கு மேல் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு 10 பேரை தமிழக அரசுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது.

தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய கல்லூரிகளில் 5 மாதங்களுக்கு மேல் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக மூத்த கல்லூரி பேராசிரியர்கள் பொறுப்பு முதல்வர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியது: பதவி மூப்பு அடிப்படையில் 5 முதல்வர் பதவியிடங் களுக்கு 10 பேரை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அதன் அடிப்படையில் 5 மருத்துவக் கல்லூரிகளிலும் இன்னும் ஒரு சில தினங்களில் முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner