எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.8 தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் கூறப் பட்டவரை உடனடியாக கைது செய்ய தடை விதித்து உச்சநீதி மன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதில் வட மாநி லங்களில் மூண்ட வன்முறை யில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப் பட்டது. எனினும் இந்த விவ காரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் கண் டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் வன் கொடுமை தடுப்பு சட்டத்தை பழைய நிலைக்கு கொண்டு வரவும், அதன் பிரிவுகளை கடுமையாக்கும் நோக்கிலும் மக்களவையில் திருத்த மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்தது. எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரி வினர் வன்கொடுமை திருத்த மசோதா என்ற அந்த மசோதா நேற்று நிறைவேறியது.

இந்த புதிய மசோதாப்படி வன்கொடுமை தடுப்பு சட்டத் தின் கீழ் புகார் கூறப்படுபவரை உடனடியாக கைது செய்ய முடியும். இதற்காக புலனாய்வு அதிகாரியின் ஒப்புதல் தேவை இல்லை. மேலும் 25 புதிய குற்றங்கள் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள் ளன. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவருக்கு இடைக்கால பிணை கிடை யாது.

அத்துடன் பாதிக்கப்பட்ட வர்களுக்கான நிவாரணத் தொகை ரூ.85 ஆயிரம் முதல் ரூ.8.25 லட்சம் வரை அதிகரிக் கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் 2 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 2 மாதங்களுக் குள் தீர்ப்பு வழங்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner