எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக. 6- காவிரி மேலாண்மை ஆணையத்தின், இரண்டாவது ஆலோ சனை கூட்டம், 9ஆம் தேதி டில்லியில் நடக்கிறது.

'தமிழகத்திற்கு ஆண்டு தோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை செயல்படுத்துவதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது.காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவ ராக, மசூத் உசேன், தமிழக பிரதிநிதிகளாக, பொதுப்பணித்துறை செயலர் பிரபாகர், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் செந்தில் குமார்ஆகியோர் நியமிக்கப்பட்டு உள் ளனர். ஆணையத்தின் முதல் கூட்டம், டில்லியில், ஜூலை, 2இல் நடந்தது. இதில், ஒவ்வொரு மாதமும், தமிழகத் திற்கு வழங்க வேண்டிய, நீரின் அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டா வது கூட்டம், 9ஆம் தேதி நடக்க உள்ளது. இதில், தமிழகம் தரப்பில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத் தப்பட உள்ளன.

காவிரி தொழில்நுட்ப பிரிவுஅதிகாரி ஒருவர் கூறியதாவது:தென்மேற்கு பரு வமழை காரணமாக, மாத ஒதுக்கீட்டை விட, கூடுதல் நீரை கர்நாடகா வழங்கி வருகிறது. மழை ஓய்ந்த பிறகும், தமி ழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரை, தடையின்றி வழங்க வேண்டும். அப் போது தான், சம்பா சாகுபடி பயிர்க ளுக்கு நீர் கிடைக்கும்

காவிரி நீர் முறைப்படுத்தும் குழு வின் கட்டுப்பாட்டில், கர்நாடகாவின் ஹேரங்கி, ஹேமாவதி, கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளை கொண்டு வரவேண்டும். இவை உள்ளிட்ட முக் கிய கோரிக்கைகள், 9ஆம் தேதி கூட்டத் தில், தமிழகம் சார்பில் வலியுறுத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner