எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஆக.6 டில்லி யில் சனிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், 2018-ஆம் ஆண்டுக்கான வி.சி. பத்மநாபன் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதை முன் னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வழங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாராட்டியுள்ளார்.

டில்லியில் மன்மோகன் சிங்குக்கு வி.சி.பத்மநாபன் நினைவு வாழ்நாள் சாதனை யாளர் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழா வில், அவருக்கு அந்த விருதினை வழங்கி கவுரவித்த பிரணாப் முகர்ஜி கூறியதாவது:

கடந்த 1991-ஆம் ஆண்டில், நாடு பொருளாதார நெருக் கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. சர்வதேச அளவில் பொருளாதாரத் துறையில் இந்தியாவின் மீது நம்பகத்தன்மை குறைந்து காணப்பட்டது. அந்த நேரத் தில்,  ரிசர்வ் வங்கியின் முன் னாள் ஆளுநரான மன்மோகன் சிங்கை அழைத்து வந்து, நாட்டின் நிதியமைச்சராக்கினார் அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்மராவ்.

அதன்பிறகு, மன்மோகன் சிங் தனது திறமையாலும், செயல் திறனாலும் பொருளா தாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தார். அதேபோல், கூட்டணி அரசை திறமையுடன் நிர்வகித்து, நாட்டின் அரசியல் உறுதியற்ற நிலைக்கு முடிவு கட்டினார். அரசியல் நிலைத் தன்மையை உறுதிசெய்து ஆட்சி செய்ததற்காக, என்றென் றும் பாராட்டப்பட வேண் டியவர்.

அவர், பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களாகும்.

ஒருமுறை சர்வதேச அளவில் பொருளாதார நெருக் கடி ஏற்பட்டது. 1930ஆம் ஆண்டு-களில் ஏற்பட்ட பொரு ளாதாரச் சரிவு மீண்டும் ஏற் படுமோ என்ற அச்சம் பரவ லாக எல்லோரிடத்திலும் காணப் பட்டது. அந்த நேரத்தில், மன் மோகன் சிங்கை அழைத்து ஆலோசனை கேட்டார் அப் போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ். நாட்டின் நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில், தனது தனிப்பட்ட முயற்சியால் பொருளாதார முன்னேற்றத்துக்கு பாடுபட் டவர் மன்மோகன் சிங் என்று  பிரணாப் முகர்ஜி பாராட்டினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner