எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஜூலை  8 தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க வேண்டிய ஆணைய பதவிக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமலிருப்பது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டு எட்டு மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி யுள்ளது.

மத்திய தகவல் ஆணையத்தின் கீழ் இயங்கும் மாநில தகவல் ஆணை யங்களில் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப் பாமல் இருப்பதால், தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்படி தகவல்களை அளிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட் டுள்ளதற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரப் பிர தேசம், மேற்கு வங்கம், தெலங்கானா, கருநாடகா, ஒடிசா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் அனுப் பிட  உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி உத்தரவு பிறப் பித்தார்.

நீண்ட காலமாக காலிப் பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருப்பது ஏன் என்று நீதிபதி ஏ.கே.சிக்ரி அரசு சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்திடம் கேள்வி எழுப்பினார்.

அஞ்சலி பரத்துவாஜ், பணிஓய்வு பெற்ற இராணுத் தளபதி லோகேஷ் பாத்ரா மற்றும் அம்ரிதா ஜோஷி ஆகியோர் சார்பில் வழக்குரைஞர்கள் காமினி ஜெய்ஸ் வால், பிரனாவ் சச்தேவா ஆகியோர் இவ்வழக்கில் வாதாடியபோது, தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி நியமனங்கள் செய்யப்பட வேண்டி யவற்றை மத்திய, மாநில அரசுகள் குறித்த காலத்தில் செய்யாம லிருப்பதன்மூலம், மூடிமறைக்கின்ற முயற்சியை செய்து வருகின்றன என்று கூறினார்கள்.

ஆன்-லைன் மூலம் மட்டுமே பிறப்பு-இறப்புச் சான்றிதழ்: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜூலை 8  ஆன்-லைன் மூலம் மட்டுமே பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கையால் எழுதப்பட்ட சான்றிதழையோ அல்லது அரசால் வரை யறுக்கப்பட்ட மென்பொருளைத் தவிர்த்து வேறு வகையான மென் பொரு ளிலோ சான்றிதழ்களை வழங்கக் கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் பிறப்பு-இறப்பு பதிவு தலைமைப் பதிவாளர் கே.குழந்தைசாமி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.  அதன் விவரம்:
தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடவடிக்கைகளை தமிழக அரசின் வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், சுகாதாரம் மற்றும் மாநக ராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. அவை பிறப்பு மற்றும் இறப்புக்காக வெவ்வேறு மென்பொருள்களைப் பயன்படுத்தி வந்தன. இப் போது அனைவருக்கும் பொது வாக சிஆர்எஸ் மென்பொருள் வழங்கப் பட்டுள்ளது. இந்த மென்பொருள், கடந்த ஆண்டு அக்.1-ஆம் தேதி முதல் அனைத்து பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட மென் பொருள் மூலம் வழங்கப்படும் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழுக்கு சட்டப் பூர்வ அங்கீகாரம் உள்ளது. இது அரசு மற்றும் அரசு சாரா அனைத்துத் தேவை களுக்கும் உண்மையான சான்றாகக் கருதப்பட வேண்டும். கையால் எழுதப் பட்ட பிறப்பு மற்றும் இறப்புச் சான்றி தழ்களை பதிவாளர்கள் வழங்கக் கூடாது. மேலும், அரசால் அங்கீகரிக்கப்படாத மென்பொருள்கள் வழியாகவும் சான்றி தழ்களை அளிக்கக் கூடாது.
அனைத்து பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை சி.ஆர்.எஸ். மென்பொரு ளின் வழியாகவே மட்டுமே அளிக்க வேண்டுமென அனைத்துப் பதிவாளர் களுக்கும் உத்தரவிட வேண்டும்.

மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி, பல மாநிலங்களிலும் ஆணையர் பதவி களில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்ப டாமல் இருந்து வருவதால், ஆணையத்திலிருந்து தகவல்களைப் பெறுவதற்கு பல மாதங்கள் ஆகின்றன. இன்னும் சில தகவல்களைப் பெறுவதில் பல ஆண்டு கள் கூட ஆகின்றன. மேல்முறையீடு செய்வது, புகாரளிப்பது என அனைத்திலும் தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005இன்கீழ் செயல்பாடு களைத் தொடர முடியாமல் அதன் நோக்கம் தோல்வியில் முடிகிறது.

மத்திய தகவல் ஆணையத்தில் நான்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதனால், மேல் முறையீடுகள், புகார்கள் என 23,500க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் நிலுவையில் உள்ளன.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஆணை யம் முற்றி லும் செயல்பாடின்றி உள்ளது. ஒரேயொரு ஆணையர் கூட இதுநாள்வரை நியமிக்கப்படவில்லை. மராட்டிய மாநிலத்தில் நான்கு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதை யடுத்து, பெரும் பின்னடைவாக 40 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மேல்முறை யீடுகள், புகார்கள் முடங்கிப்போய் உள்ளன.

கேரளாவில் ஒரேயொரு ஆணைய ரைக்கொண்டு ஆணையம் இயங்கி வருகிறது. 14ஆயிரத்துக்கும் மேற் பட்ட மேல்முறையீடுகள், புகார்கள் நிலுவையில் உள்ளன. அதேபோன்று கருநாடக மாநிலத்தில் ஆணையத் தில் ஆறு பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 33ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்முறை யீடுகள், புகார்கள் நிலுவையில் உள்ளன.

ஒடிசாவில் மூன்று ஆணையர்கள் மட்டுமே உள்ளனர். அதனால், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள், புகார்கள் நிலுவையில் உள்ளன.

தெலங்கானாவில் ஆணையத்தில் இரு ஆணை யர்கள் மட்டுமே உள்ளனர். அதனால்  15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்முறையீடுகள், புகார்கள் நிலுவையில் உள்ளன.

மேற்கு வங்க மாநிலத்தில் இரு ஆணை யர்களை மட்டுமே கொண்டு இயங்கி வருகிறது. 10 ஆண்டு களுக்கு முன்பாக அளிக்கப்பட்ட புகார்கள், மேல் முறை யீடுகள் தற்பொழுதுதான் விசாரிக்கப் படுகின்றன.

தகவல்களை அளிப்பதற்கான ஆணை யர்கள் முறையாக செயல்பட்டால்தான், தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 இன்படி, நாட்டில்  அரசுப்பணி களில் வெளிப்படைத்தன்மை பாதுகாக்கப்படும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆணையத்தில் ஆணையர்கள் நியமிக் கப்படாமை குறித்து உரிய விளக்கங்களை அளித்திட குறிப்பிட்ட எட்டு மாநிலங் களுக்கும் கடிதம் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி ஏ.கே.சிக்ரி, மத்தியஅரசின் வழக் குரைஞரிடமும் ஏன் ஆணையப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner