தேசிய காவல்துறை அருங்காட்சியகம்
புதுடில்லி, ஜூன் 12 இந்தியாவில் முதல் முறையாக தேசிய காவல் துறை அருங்காட்சியகம் டில்லி யில் விரைவில் தொடங்கப்பட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவின் முதல் தேசிய காவல்துறை அருங்காட்சி யகம் டில்லியின் அமைக்க மத் திய அரசு திட்டம் தீட்டி உள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. டில்லி யின் லுடைன்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது.
தேசிய காவல்துறை நினைவு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் காவல்துறையின் வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் அவர்கள் பயன்படுத்திய சீருடை, ஆயுதங்கள், கலைப்பொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் பயன்படுத்திய அனைத்து பொருட்களும் வைக்கப்படும்.
இந்த அருங்காட்சியகத்தை வருகின்ற அக்டோபர் மாதம் காவல்துறை நினைவு தினமான 1-ம் தேதி பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.